(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra New CM: மகாராஷ்ட்ராவின் புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே..! ட்விஸ்ட் மேல் ட்விட்ஸ்ட் கொடுத்த ஃபட்னாவிஸ்!
மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பார் என்று தேவேந்திர பட்னாவிஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மாநிலத்தின் முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்பார் என்று முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மகாராஷ்ட்ர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட்டதால், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்களை சமாதானப்படுத்த மேற்கொண்ட உத்தவ்தாக்கரே மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, நேற்று இரவு முதல்வர் பதவியை உத்தவ்தாக்கரே ராஜினாமா செய்தார். இந்தநிலையில், மகாராஷ்ட்ராவில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியது.
இந்த சூழலில், இன்று மாலையில் ஆளுநர் பகத்சிங் கேஷ்யாரியை ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேவேந்திர பட்னாவிஸ், “ உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் பால்தாக்கரேவின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது. 2019ல் பா.ஜ.க. ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறும். அமைச்சரவையில் நான் இடம்பெறமாட்டேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்காதது பா.ஜ.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெற இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு ஏற்பது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதவியேற்பு இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க : Manipur Landslide : மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு...! மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்..!
மேலும் படிக்க : Electric Shock Church : பிசிரு ஒயர் மைக்.. தொட்டதும் தட்டிய மின்சாரம்! ஞானஸ்தானத்தின்போது நடந்த பகீர் சம்பவம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்