ரூ.50 லட்சம்; அரசு வேலை: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த அரசு!
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா நிபந்தனைகள் விதித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களையும் நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் இந்திய உள்துறை அமைச்சகம் பஹல்காம் தாக்குதலுக்கு பின் இருக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 6 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில் “பஹல்காம் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் விவரம்:
1) அதுல் மோனே - டோம்பிவலி
2) சஞ்சய் லேலே - டோம்பிவலி
3) ஹேமந்த் ஜோஷி - டோம்பிவலி
4) சந்தோஷ் ஜக்தலே - புனே
5) கவுஸ்துப் கன்போட்- புனே
6) திலீப் டெஸ்லே- பன்வேல்





















