Human Finger In Icecream : கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல்.. ஆன்லைன் ஆர்டரால் அதிர்ந்த பெண்.. தீவிர விசாரணை
மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மும்பையின் மலாட் பகுதியில் பெண் ஒருவர் ஆசையாக இருக்கிறது என்று ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவர் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Maharashtra | A woman found a piece of human finger inside an ice cream cone that was ordered online in the Malad area of Mumbai. After which the woman reached Malad police station. Malad police registered a case against the Yummo ice cream company and sent the ice cream for…
— ANI (@ANI) June 13, 2024
இது குறித்து அந்த பெண் உடனடியாக காவல்நிலையில் ஐஸ்கீரிமுடன் சென்று புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் உறுதிப்படுத்துவதற்காக, ஐஸ்கிரீமில் கிடைத்த விரலை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். அந்தப் பெண் ஐஸ்கிரீமில் பாதிக்கு மேல் சாப்பிட்டுள்ளார். அந்தநேரத்தில் ஏதோ ஒன்று வாயில் தட்டுப்படவே, ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
போலீஸ் தரப்பில் சொன்னது என்ன..?
தற்போது இந்த விவகாரத்தில் மலாட் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், "மும்பையின் மலாட் பகுதியில், ஆன்லைனில் ஆர்டர் செய்த கோன் ஐஸ்கிரீம்க்குள் ஒரு மனித விரலின் துண்டை கண்டு ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண் உடனடியாக மலாட் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனமான யம்மோ ஐஸ்கிரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும், அந்த ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ்கிரீமில் காணப்படும் மனித உடல் உறுப்பை FSL (Forensics) க்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.