மேலும் அறிய

"சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதை" சு. வெங்கடேசன் காட்டமான விமர்சனம்! 

கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிக்க வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் சிபில் ஸ்கோர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 

"கார்ப்பரேட் முதலாளிகள் விதிவிலக்கு"

எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது. இவர்களின் அநீதிக்கு கார்ப்பரேட் முதலாளிகள் விதிவிலக்கு. சிபில் ஸ்கோர் முறையை முற்றிலும் நீக்க வேண்டும்.

சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற அமெரிக்காவின் தலைமையகமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம். இது, 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது.

சிபிலின் நடைமுறை வெளிப்படைத்தன்மை அற்றது. உயர்வான மதிப்பெண் பெற பல்வேறு நடைமுறைப்படுத்த முடியாத நிபந்தனைகளை விதிக்கிறது. ஒரே ஒரு தவணை தவறினாலும் சிபில் ஸ்கோர் குறையும். சமரச ஒப்பந்தம் போட்டு சிறிது அளவு வட்டி சலுகை உடன் கடனை அடைத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும்.

காட்டமாக விமர்சித்த சு. வெங்கடேசன்:

கடன் அட்டைகளில் 30 சதவீதத்திற்கு மேல் பயன்படுத்தினால் சிபில் ஸ்கோர் குறையும். எது கூடுதலான சலுகை உள்ள வங்கி என்று தெரிந்து கொள்வதற்காக ஒருவர் இரண்டு மூன்று வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தால் சிபில் ஸ்கோர் குறையும். சிபில் ஸ்கோர் குறைந்தது 300 அதிகம் 900.

ஆனால், கடனே வாங்காதவருக்கு மைனஸ் ஒன், பூஜ்யம் என்று ஸ்கோர் வரும். அப்படியே அவருக்கு கடன் கிடைத்தாலும் வட்டி அதிகம் ஆகும். கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ற போல் வட்டி மாறும்.

பெரும்பாலான கடனாளிகளின் வட்டி கூடுதலாகும். 800 என்பதுதான் ஆகச்சிறந்த ஸ்கோர். அதை ஆக பெரும்பாலானவர்களால் அடையவே முடியாது. கல்விக் கடன் பெறுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் படும் துயரத்துக்கு அடிப்படையாக பலநேரம் இருப்பது சிபில் ஸ்கோர்.

ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை:

கடனே வாங்காத நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியதாக சிபில் ஸ்கோர் வருகிறது. ஆனால், அதை நேர் செய்வது மிகவும் கடினமான வேலை. சிபிலின் நடைமுறையே கேள்விக்குறிய ஒரு விஷயம். இது எதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிடையாது.

வேண்டுமென்றே பணத்தை திருப்பிக் கட்டாத wilful defaulter கடனை, தள்ளுபடி போக ஏதோ ஒரு தொகை, செலுத்தினாலும், ஒரு வருடம் கழித்து அவருக்கு மீண்டும் கடன் கிடைக்கும். 2002 வரை ரிசர்வ் வங்கி தான் கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானித்து வந்தது.

அதற்குப் பிறகுதான் சிபில் உள்ளே நுழைந்தது. மொத்தத்தில் சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி.

கடன் மதிப்பெண்களை சிபில் என்ற பன்னாட்டு நிறுவனம் தீர்மானிப்பது உடனடியாக கைவிடப்பட வேண்டும். முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியே வெளிப்படை தன்மையோடு கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை தீர்மானிப்பதற்கும், அதில் உள்ள குறைகளை எளிதாக தீர்ப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இத்தகைய நடைமுறை அனைவருக்கும் சமமாக கார்ப்பரேட்டுகளுக்கும் பொருந்தும் படி அமைய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Alert:  5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Weather Alert: 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Alert:  5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Weather Alert: 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. மக்களே ரெடியா இருங்க!
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Crime: கசிந்த ரகசியம்.. ”என் புருஷனை கொன்னுடு” காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த 3 குழந்தைகளின் தாய்
Priyanka Gandhi Vs CEC: “நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
“நீங்க நிம்மதியா ஓய்வு பெற முடியாது“; தலைமை தேர்தல் ஆணையரையே எச்சரித்த பிரியங்கா காந்தி
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Coimbatore Lady Kidnap: இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
இப்படி பண்றீங்களே மா.! கோவை பெண் கடத்தலில் ட்விஸ்ட்; காவல்துறை வெளியிட்ட பெண்ணின் விளக்க வீடியோ
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
Rahul Vs BJP: பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சி; ஜென் Z விடமாட்டார்கள்; பாஜக-வை வெளுத்த ராகுல்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Embed widget