Watch Vidoe : ஆஞ்சநேயர் கட்-அவுட்டுக்கு முன் ’ரேம்ப் வாக்’ செய்த பாடிபில்டர் பெண்கள்.. சர்ச்சையாகும் வீடியோ..
மத்திய பிரதேசத்தில் நடந்த பாடி பில்டிங் போட்டியில் ஹனுமன் கட் அவுட் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் ரேம்ப்-வாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Watch Vidoe : மத்திய பிரதேசத்தில் நடந்த பாடி-பில்டிங் போட்டியில் ஹனுமன் கட்-அவுட் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் ரேம்ப்-வாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் மார்ச் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் பாடி பில்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டில் பெண் பாடிபில்டர்ஸ் ஏராளமானோர் பங்கேற்றனர். பாஜகவினர் நடத்திய இந்த போட்டியில் மேயர் பிரஹேலாத் படேல் மற்றும் சட்டன்ற உறுப்பினர் சைதன்யா காஷ்யப் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி மேடையின் ஒரு பக்கத்தில் ஹனுமன் கட் அவுட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த கட் அவுட் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் அனைவரும் ரேம்ப் வாக் செய்து போஸ் கொடுத்தனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
வலுக்கும் கண்டனங்கள்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வகையில் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "ஹனுமன் சிலை முன்பு இதுபோன்று நடத்தது அநாகரீகமான செயல். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவர்களின் கடவுள்களை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
बीजेपी नेताओं ने किया हनुमान जी का अपमान :
— MP Congress (@INCMP) March 6, 2023
रतलाम में भाजपा के बीजेपी विधायक चैतन्य कश्यप और महापौर प्रह्लाद पटेल ने हनुमान जी की मूर्ति स्टेज पर रखकर अश्लीश कार्यक्रम का आयोजन किया।
शिवराज जी,
भाजपा बार-बार हिन्दुओं का अपमान क्यों करती है❓ pic.twitter.com/C4FWb2i72N
மேலும், "இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பாஜகவினர் நடத்திய இந்த போட்டி கடும் கண்டனத்திற்குரியது. இது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயல். மத கடவுள்களை பாஜக அவமதிக்க வேண்டாம்” என்று என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் கே.கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹனுமன் கட் அவட் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் ரேம்ப் வாக் செய்தது கடவுகளை அவமதிக்கும் செயலாக கருதுகிறேன். இந்த போட்டியை நடத்திய பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் ஹிதேஸ் பாஜ் பாய் கூறுகையில், "பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களை தவறான நோக்கத்துடன் பார்க்கின்றனர். அதனால்தான் இதுபோன்று காங்கிரஸ் கட்சியினர் பேசுவதாக" தெரிவித்தார். மேலும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.