Viral Video: காவல்நிலையத்தில் புகார் அளித்த 3 வயது சிறுவன்..! சைக்கிள், சாக்லேட் கொடுத்த அமைச்சர்...
Viral Video: மத்தியப்பிரதேசத்தில் தனது தாயாருக்கு எதிராக புகார் அளித்த சிறுவனுக்கு மிதிவண்டி, சாக்லேட்டை அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பரிசாக கொடுத்துள்ளார்.
Viral Video: மத்தியப்பிரதேசத்தில் தனது தாயாருக்கு எதிராக புகார் அளித்த சிறுவனுக்கு மிதிவண்டி, சாக்லேட்டை ம.பி. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பரிசாக கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், ஒரு குழந்தையின் தாயார் தனது சாக்லேட்களை திருடியதாக குற்றம் சாட்டி கொடுத்த புகாரை எழுதும் காட்சி சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலானது. குளித்ததற்கு பிறகு தனது தாய் தனக்கு மை வைத்து விட்டதால் தனக்கும் தனது தாய்க்கும் சண்டை நடந்ததாக அந்த மூன்று வயது குழந்தை குற்றம் சாட்டியது.
அவனது தந்தை சமாதானம் செய்ய முயற்சித்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தே ஆக வேண்டும் என்று அந்த சிறுவன் அடம் பிடித்துள்ளான். அதனால் மூன்று வயது குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்னார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெத்தலை காவல் நிலையத்திற்கு தனது தந்தையுடன் அழைத்துச் சென்றுள்ளான்.
அந்த இடத்தில் தனது அம்மா தன்னை அறைந்த விட்டதாக அந்த குழந்தை புகார் கொடுத்துள்ளது. அதோடு தனது சாக்லேட்டுகளை திருடியதாகவும் தாய் மீது அந்த சிறுவன் குற்றம் சாட்டியுள்ளான். விளையாட்டாக அவன் கூறுவதை, சரி என்று கேட்டுக் கொண்டு சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் ஒரு பேனா, காகிதம் எடுத்து புகாரை பதிவு செய்து கொண்டார். அம்மா அடித்தார்களா? என்று போலீஸ் கேட்டதற்கு இல்லை, என் அம்மா என்னுடைய சாக்லேட் மட்டும் திருடினார் என்று வெகுளித்தனமாக கூறினான். குளித்துவிட்டு வந்ததும் வேண்டாம் என்று சொல்லியும் மை வைத்துவிட்டார் என்று கூறி க்யூட்டாக புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
मासूम ने गृहमंत्री की तरफ से भेजी चॉकलेट खाकर की साइकिल की सवारी@drnarottammisra @JournalistVipin pic.twitter.com/r3zqoNaE6c
— News24 (@news24tvchannel) October 18, 2022
சிறுவன் புகார் அளிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, மத்தியப்பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா 4 வயது சிறுவனிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது அந்த சிறுவனிடம் உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். பின்பு அந்த சிறுவன் கேட்டு கொண்டதற்கிணங்க, சைக்கிள் மற்றும் சாக்லேட்டை பரிசாக கொடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்பு, அந்த சிறுவன் மகிழ்ச்சியுடன் சைக்கிள் ஓட்டுவதைக் காட்டும் வீடியோவை ம.பி. அமைச்சர் நரோட்டா மிஸ்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.