Crime : கொல்லும் மூடநம்பிக்கை: குழந்தைக்கு நிமோனியா.. 20 முறை இரும்பி கம்பியால் வயிற்றில் சூடு.. உச்சகட்ட கொடூரம்
நிமோனியா பாதித்த மூன்று மாத குழந்தைக்கு வயிற்றில் 20 முறை சூடுவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Madhya pradesh : நிமோனியா பாதிக்க மூன்று மாத குழந்தைக்கு வயிற்றில் 20 முறை சூடு வைத்ததால் குழந்தையின் உயிர்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷங்டேல் மாவட்டத்தில் ஒரு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு இருக்கும் மூன்று மாத குழந்தைக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிமோனியா பாதித்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு பதிலாக, பழங்குடியின மக்களின் மூட நம்பிக்கையாக, சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு வயிற்றில் வைத்தால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு இருந்துள்ளது.
இதனால் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சூடான இரும்பி கம்பியை வயிற்றில் வைக்க முடிவு செய்தனர். இதற்கு அந்த குழந்தையின் தாய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது குடும்பத்தினர் குழந்தைக்கு இதுபோன்று செய்தால் குணமாகும் என்று கூறினர். அதன்படி, அந்த மூன்று மாத குழந்தையின் வயிற்றில் 20 முறை சூடான இரும்பியை வயிற்றில் வைத்துள்ளனர்.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் கழித்து உடல்நிலை மோசமடைய தொடங்கியது. குழந்தையின் உடல்நிலை மோசமடையவே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 15 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்ற குழந்தை உயிரிழந்தது.
குழந்தை இறந்த பிறகு, தாய் ரோஷ்ணி காவல்துறையில் புகார் அளித்தார். அவரது குடும்பத்தினர், பாரம்பரிய மருத்துவர் மீது புகார் அளித்ததை அடுத்து, அவர்கள் மீது ஷாதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சாதோல் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ” சாதோல் மாவட்டத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கையால் இதுபோன்று நடப்பது இது இரண்டாவது முறை. இதனை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் முடிந்தபாடில்லை. இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற மூட நம்பிக்கைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Crime: பாலியல் அத்துமீறல்... இளைஞரை மிகத்திறமையாக போலீசிடம் சிக்க வைத்த சிறுமி .. நடந்தது என்ன?