Madhya Pradesh: 121 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்..
விரைவில் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
விரைவில் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
நேற்று கர்ஹாவில் உள்ள பாகேஷ்வர் தாமில் நடந்த 121 2ஜோடிகள் திருமண விழாவில் புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்.
मुख्यमंत्री बनते ही मध्यप्रदेश की धरती पर मैंने सबसे पहली अगर कोई योजना बनाई तो वह थी मुख्यमंत्री कन्या विवाह योजना: CM pic.twitter.com/vvDNkESA8Z
— Chief Minister, MP (@CMMadhyaPradesh) February 18, 2023
”ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களிடம் இருந்து வித்தியாசமாக நடத்தப்பட்டனர். ஆனால் அந்த நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் சென்றுவிட்டன. மேலும் நான் முதல்வராக பதவியேற்றவுடன், மத்திய பிரதேசத்தில் நான் கொண்டு வந்த முதல் திட்டம், கன்யா திருமண யோஜனா தான்” என்றார். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் சமமாக நடத்தப்படுகிறார்கள். இதனை காணும் போது தான் மகிழ்ச்சியடைவதாக முதலமைச்சர் சவுகான் தெரிவித்தார். அவர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானபோது, பெண்கள் வெகுஜன திருமணத்தை பற்றியும் அதில் இருக்கும் பிரச்சணை குறித்தும் பேசினார்.
இந்த திருமண விழாவில் 121 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். விழாவில் முதலமைச்சர் சௌஹானைத் தவிர, கட்சியின் மாநிலத் தலைவர் வி.டி.சர்மா மற்றும் பாகேஷ்வர் பீத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு தம்பதிகளை ஆசிர்வதித்தனர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "44 லட்சம் பெண்கள் லட்லி லட்சுமி யோஜனாவின் பலன்களைப் பெறுகிறார்கள். லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது, இதன் கீழ் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படும். வளர்ச்சியடைய மூன்று பாதைகள் உள்ளன - பக்தி பாதை, செயல் பாதை மற்றும் அறிவின் பாதை. பாகேஷ்வர் தாம் இந்த மூன்று பாதைகளை கொண்டு இயங்குகிறது" என சவுகான் குறிப்பிட்டார்.