ஏமாற்றுவது எப்படி? யூடியூப்பில் கற்று கொண்டு அரசு தேர்வு பயிற்சி மாணவர்களிடம் சிறுவன் கைவரிசை!
சிவில் சர்வீஸ் தேர்வின் வினாத்தாளை விற்பதாகக் கூறி, மாணவர்கள் சிலரை சிறுவன் ஒருவன் ஏமாற்றி உள்ளான். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அரசு பணியிடங்களுக்கான தேர்வின் வினாத்தாளை விற்பதாக கூறி, மாணவர்கள் சிலரை ஏமாற்றி இருக்கிறார் ஒரு நபர். காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களை ஏமாற்றியது 10ஆம் வகுப்பு மாணவன் என்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: யூடியூப்பில் ஏமாற்றிவது எப்படி என கற்று கொண்டு மாணவர்களிடம் அந்த சிறுவன் கைவரிசை காட்டியுள்ளார். கிடைக்கும் பணத்தில் விலை உயர்ந்த ஆடைகளையும் காலணிகளையும் வாங்க அந்த சிறுவன் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த குற்றம்சாட்டப்பட்ட சிறுவன், ஸ்டைலான உடைகள் மற்றும் காலணிகளை வாங்கவும் ஆடம்பரமான உணவகங்களில் சாப்பிடுவதற்காகவும் இந்த செயலில் ஈடுபட்டதாக இந்தூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாளை விற்பதாக கூறி, பலரை அந்த சிறுவன் ஏமாற்றியுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். காவல்துறை உதவி ஆணையர் (ஏசிபி) துஷார் சிங், இதுகுறித்து பேசுகையில், "ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சமூக ஊடக தளமான டெலிகிராமில் ஒரு சேனலை உருவாக்கினார்.
யூடியூப்பில் ஏமாற்ற கற்று கொண்டு சிறுவன்: ஜூன் 23 அன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணைய (எம்பிபிஎஸ்சி) தேர்வின் முதற்கட்ட சுற்றுத் வினாத்தாள் தன்னிடம் இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும், அவற்றை 2,500 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அரசுப் பணித் தேர்வுத் தாள்களைப் பெற வேண்டும் என்ற ஆசையில் க்யூஆர் கோட் மூலம் சிலர் பணம் செலுத்தியுள்ளார்கள். பணம் பெற்ற உடனே, அவர்களின் மொபைல் எண்ணை சிறுவன் பிளாக் செய்திருக்கிறார். இந்த ஏமாற்று முறையில், இரண்டு முதல் நான்கு தேர்வர்களை சிறுவன் ஏமாற்றியுள்ளார்.
ஆனால், அவரிடம் எந்த விதமான தேர்வு தாளும் இல்லை. தன்னிடம் தேர்வு தாள் இருப்பதாக பொய் கூறியுள்ளார். யூடியூப்பில் ஆன்லைன் மோசடியின் தந்திரங்களை கற்றுக்கொண்டதாக சிறுவன் கூறுகிறார். ஏமாற்றப்பட்ட பணத்தில், ஆடம்பர ஆடைகள் மற்றும் காலணிகளை வாங்க விரும்பி இருக்கிறார். விலையுயர்ந்த உணவகங்களில் சாப்பிடுவதற்காக இப்படி செய்துள்ளார்" என்றார்.