“மணிப்பூர் கொடூரம்: தெய்வம், தேவி, கடவுள் - அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள்” - கொதித்தெழுந்த வைரமுத்து, நவீன்
பெண்களை தெய்வம், தேவி, கடவுள் என கூறிவிட்டு, உடலில் ஆடையை அவிழ்த்து ஊர்வலம் நடுத்துவோரின் காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களை தெய்வம், தேவி, கடவுள் என கூறிவிட்டு, உடலில் ஆடையை அவிழ்த்து ஊர்வலம் நடுத்துவோரின் காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண்களை நிர்வாணமாக நடக்கவிட்ட கொடூரம்
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைளை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பெண்களையும் அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும், அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
வன்கொடுமைக்கு பின்னால் இருக்கும் காரணம்
வீடியோவை பார்த்து பலரும் கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில், தீவிர விசாரணை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார். பழங்குடியின பெண்களின் மீது நடத்தப்பட்ட கொடூரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஸ்மிரிதி ராணி உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நீண்ட நாட்களாக பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என மெய்டீஸ் சமூகத்தினர் வலியுறுத்தி வருவதால், அதற்கு எதிராக மே 3ம் தேதி மெய்டீஸ் சமூகத்துக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தினர். அதில் வெடித்த வன்முறை தற்போது வரை நீண்ட கலவரமாக மாறியுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக காட்சியளிப்பதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழலில் தான், பழங்குடியினர் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கும் கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.
தெய்வம் என்பார் பெண்களை;
— வைரமுத்து (@Vairamuthu) July 20, 2023
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்…
மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளது
இந்த நிலையில் மணிப்பூரில் அரங்கேறிய கொடூரத்தை கவிதை மூலம் கடுமையாக கண்டித்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அவரது வரிகளில், பெண்களை தெய்வம், தேவி, கடவுள், பார்வதி என்று அழைக்கப்பட்டவார்கள், ஆனால் அவர்களை உடல் உரித்து ஊர்வலம் விடுவார்கள், இந்த கொடுமையை பார்த்து நாம் தலையில் அடித்து கொள்ள கூடாது, காட்டுமிராண்டிகளின் தலையில் தான் அடிக்க வேண்டும், அதிகாரத்தில் உள்ளவர்கள் களமிறங்குகள் ஏனெனில் மணிப்பூர் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
இதேபோன்று நடிகரும், இயக்குனருமான நவீன் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ”திரெளபதிகளுக்கு சேலை கொடுப்பதைவிட, துச்சாதனன்களின் மனதில் படிந்திருக்கும் வக்கிரங்களை வெறிகளை அகற்றியிருக்க வேண்டியதே கண்ணபரமாத்மாக்களின் முதல் வேலையாக இருந்திருக்க வேண்டும். நாம் பாரம்பரியம் கலாச்சாரம் என்று புளுகுவதெல்லாம் ஹிப்பகிரசிதான்” என கடுமையாக கண்டித்துள்ளார்.