மேலும் அறிய

Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?

CDS Raja Sunbramani: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினண்ட் ஜெனரலான என்.எஸ். ராஜா சுப்ரமணி என்பவரை, புதிய முப்படை தலைமை தளபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

CDS Raja Sunbramani: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

புதிய முப்படை தலைமை தளபதி நியமனம்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை இந்தியாவின் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) மத்திய அரசு நியமித்துள்ளது. அதோடு, வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் அடுத்த கடற்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை இந்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முப்படைத் தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சௌகான், 2026 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். அதைதொடர்ந்து புதிய முப்படை தலைமை தளபதி பதவியேற்க உள்ளார். 

யார் இந்த ராஜா சுப்ரமணி?

டில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்ற ராஜா சுப்ரமணி, டெல்லி மற்றும் லண்டனில் பயின்றுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985ம் ஆண்டு டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணியில் சேர்ந்தார்.  ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  கடந்த ஆண்டின் செப்டம்பர் 1ம் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து. முன்னதாக,  ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார். மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் இருந்தார்.

ராணுவ பணிகளும், விருதுகளும்..

கஜகஸ்தானின் அஸ்தானாவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். கர்னல் பதவியில், ராணுவத் தலைமையகத்தில் இருக்கும் எம்எஸ் கிளையில் உதவி ராணுவச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் துறையின் துணைத் தளபதியாகவும், ஜிஓசி-யின் சென்ட்ரல் கமாண்டராகவும் பணிபுரிந்துள்ளார்.

பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையில் காலாட்படையை வழிநடத்தியுள்ளார். வடகிழக்கு இந்தியாவில் 'ப்ளாக் கேட்ஸ்' பிரிவை மேற்பார்வையிட்ட இவர், 2020-ல் உத்தர பாரத் பகுதிக்கும் அம்பாலாவில் உள்ள முக்கிய கார்கா கார்ப்ஸுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் என்.எஸ் ராஜா சுப்ரமணிக்கு விஷிஷ்ட் சேவா பதக்கமும், 2020 ஆம் ஆண்டில் இவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. இதுபோக சேனா பதக்கத்தையும், பரம் விஷிஷ்ட் சேவா பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார்.

கடற்படைக்கு புதிய தலைமை தளபதி:

மும்பையில் மேற்கு கடற்படை பிரிவு தளபதியாக இருக்கும் துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், வரும் மே 31ம் தேதி அன்று அடுத்த கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2028 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற துணை அட்மிரல் சுவாமிநாதன், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்முறையில் நிபுணர் ஆவார்.

இவர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமி, இங்கிலாந்தின் ஸ்ரீவென்ஹாமில் உள்ள கூட்டுப் படைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, கரஞ்சாவில் உள்ள கடற்படைப் போர்முறைக் கல்லூரி, மற்றும் ரோட் தீவின் நியூபோர்ட்டில் உள்ள அமெரிக்கக் கடற்படைப் போர்க் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget