மேலும் அறிய

Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!

Ayodhya Ram Temple : ராமர் சகோதரத்துவத்தின் சின்னம், அனைவரிடமும் அன்பாக இருந்தவர் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று தெரிவித்துள்ளார்.

Ram temple : அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதியின்படிதான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதிருப்திக்கு வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் (ஜனவர்,2024) தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பூரி கோவர்தன் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி  ( Jyotishmath Shankaracharya Avimukteshwarananda Saraswati) ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் செல்லமாட்டேன் என்றும் சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ஆன்மீக மத குரு ஒருவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுடன் இது தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பூரி சங்கராச்சாரியார்களில் நான்கு பேர்களில் இன்னொருவரான நிச்சலானந்தா சரஸ்வதியுன் இதே கருத்தை முன்வைத்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா முறையான விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பூரி மடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் உடன் ஒருவரை அழைத்து வரலாம்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மடத்திலுள்ள நான்கு சங்காராச்சாரியார்களும் தானே செல்ல முடியும் என்று மடம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ள நிலையில், சிலை பிரதிஷ்டை செய்வதில் சாஸ்திரங்கள் சொல்லும்படி இல்லை என்பதால் நிகழ்வில் பங்கேற்கமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பூரி சங்கராச்சாரியார் கருத்திற்கு விளக்கம் அளித்துள்ள வாழும் கலை ஆன்மீக அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “ ’ப்ரான் ப்ரதிஷ்டா' செய்த முடித்த பிறகும் கோயில் கட்டலாம். இதை விதிகள் அனுமதிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திலும் இந்த முறைபடியே கோயில் கட்டப்பட்டது. ராமரே அதை செய்துள்ளார். ராமர் முதலில் சிவலிங்கத்தின் பிராண பிரதிஷ்டை செய்தார். ஆனால், அப்போது அவருக்கு கோயில் கட்டுவதற்கு நேரமில்லை. பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. மதுரை, திருப்பதியில் பாலாஜி கோவில், இரண்டும் ஆரம்பத்தில் சிறியதாக இருந்தது. பின்னர் மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. “ என்று விளக்கம் அளித்துள்ளார். 

அயோத்தியில் கோயில் தேவை என்பதை நியாயப்படுத்திய அவர், “இது ஒரு கனவு நனவாகும் தருணம். ஐந்து நூற்றாண்டுகளாக மக்கள் காத்திருப்பதும் இதற்காகதான். ராமர் கோயிலை காண வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றனர்..500 ஆண்டுகளுக்கு முன் நடந்த தவறை சரி செய்வதற்கான ஒரு நிகழ்வு. அதனால் நாடு முழுவதும் ஒரு பெரிய கொண்டாட்ட உணர்வும், மிகுந்த உற்சாகமும் நிலவி வருகிறது. அனைவரும் சமம்; அனைவருக்கும் நீதி கிடைக்கும்;  அனைவரும் மகிழ்ச்சியாக செழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்லும் வாழ்வியல் 'ராம் ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படுகிறது. வேறெதிலும் இல்லாத வகையில்,  ராம் ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு இரண்டையும் கொண்டதாக இருக்கிறது. நீதியும் சமத்துவமும் உள்ளது. இதுவே பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணின் மக்களின் கனவாக இருந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

நாட்டின் வளர்ச்சி பற்றி பேசிய ரவிசங்கர். "உலகின் தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது. முன்னேற்றத்தின் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.  ராமர் எல்லாருக்குமான அரசனாக இருந்தார். ராமரின் காட்டில் மீனவர், படகோட்டி மற்றும் பழங்குடிப் பெண்ணான ஷபரி (Shabari) என பாகுபாடில்லாமல் அரவணைத்தார். இது வேற்றுமையில் ஒற்றுமையை காட்டுகிறது.” என்று ராமர் பற்றி பெருமையிடன் விளக்கினார். 

ராமர் சகோதரத்துவத்தின் சின்னம், அனைவரிடமும் அன்பாக இருந்தவர் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget