மேலும் அறிய

Kerala Landslide: கேரளாவை ஓயாது அடிக்கும் இயற்கை சீற்றங்கள் - 25 ஆண்டுகளில் இத்தனை மோசமான சம்பவங்களா?

Keralas Natural Disaster: கேரளாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Keralas Natural Disaster: கேரளாவில் கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

கேரளாவை துரத்தும் இயற்கை சீற்றங்கள்:

கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரளா மாநிலம், தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத சுற்றுலா தளமாகவும் உள்ளது. இங்குள்ள இயற்கை எழிலை காண்பதற்காகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். அதேநேரம், அந்த இயற்கையே அம்மாநில மக்களுக்கு அவ்வப்போது பேராபத்தாகவும் மாறி வருகிறது. கடந்த கால் நூற்றாண்டில் இயற்கை சீற்றத்தால் பேரழிவுகளை எதிர்கொண்ட தென்மாநிலம் கேரளா தான் என்பதி எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு உதாரணமாக தான், தற்போது வயநாட்டில் ஏற்படுள்ள நிலச்சரிவில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளில் கேரளா மாநிலம் எதிர்கொண்ட, மோசமான விபத்துகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விபத்துகளும், இயற்கை சீற்றங்களும்:

  • கடந்த 1999ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேராதவர்கள் ஆவர்.
  • கடந்த 2011ம் ஆண்டு சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்காக சென்ற பகதர்களால், புல்லுமேடு பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 106 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்
  • கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காணாமால் போயினர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர்
  • கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் பருவமழை வெளுத்து வாங்க, கேரளா பேரிடரை எதிர்கொண்டது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளில் சிக்கி 470 பேர் உயிரிழந்த நிலையில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டன
  • கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனமழை கொட்டியதில், பெட்டிமுடி பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மண்ணுக்கடியில் சிக்கியதாக கூறப்படும் 4 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்படவில்லை
  • கேரளா மாநிலத்தில் 2018 மற்றும் 2021ம் ஆண்டில், வௌவ்வால்களால் பரவிய நிஃபா வைரஸ் பாதிப்பால் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

தொடரும் படகு விபத்துகள்:

  • கடந்த 2007ம் ஆண்டு தட்டேக்காட் பகுதியில் நடந்த படகு விபத்தில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்
  • கடந்த 2009ம் ஆண்டு தேக்கடி ஏரியில் டபுள் டக்கர் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 45 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், டெல்லி மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • கடந்த ஆண்டு மே மாதம் மலப்புரம் அடுத்த தனுர் பகுதியில் நடந்த படகு விபத்தில், குழந்தகள் உட்பட 22 பேர் பலியாகினர்.

இயற்கை சீற்றங்களாலும், மனித தவறுகளாலும் வெகுஜன மரணங்கள் என்பது கேரளாவில் தொடர்கதையாகி வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் சில திட்டங்களும், இயற்கை சீற்றங்களுக்கு காரணமாக அமைவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget