Video Viral : நிலச்சரிவில் சிக்கவிருந்த ரயில்.. ஓட்டுநர் செய்த காரியம் தெரியுமா? த்ரில் காட்சிகள்..
இமாச்சல பிரதேசத்தில் வியாழக்கிழமை நிலச்சரிவைத் தொடர்ந்து சிம்லா-கல்கா பாரம்பரிய ரயில் பாதையில் ரயில் சேவை தடைபட்டது.
இமாச்சல பிரதேசத்தில் வியாழக்கிழமை நிலச்சரிவைத் தொடர்ந்து சிம்லா-கல்கா பாரம்பரிய ரயில் பாதையில் ரயில் சேவை தடைபட்டது.
சோலன் மாவட்டத்தில் உள்ள பட்டா மோர் அருகே 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது, மலையிலிருந்து பெரிய கற்கள் விழத் தொடங்கியதை அடுத்து ரயில் நிறுத்தப்பட்டது.
Landslide Hits Shimla-Kalka Heritage Rail Track, Driver Brakes In Time https://t.co/Jhz9HmZjwe pic.twitter.com/sjhf0ltNIn
— NDTV (@ndtv) August 4, 2022
கவனத்துடன் இருந்த டிரைவர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாதையில் உள்ள கற்கள் அகற்றப்பட்டவுடன் சேவைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், இமாச்சல் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் ஏற்பட்ட மெகா வெடிப்பால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இமாச்சலபிரதேசத்தில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் குலு மாவட்டம் மணிகரன் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ஜோல்ஜ் என்ற கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளை பாறைகளும், டன் கணக்கில் சரிந்த மண்ணும் தரைமட்டமாக்கி விட்டன. திடீர் வெள்ளத்தில் சிக்கிய 5 கிராமத்தினரை காணவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
Train Services Suspended After Landslide At Shimla Kalka Heritage Rail Track In Himachal Pradesh https://t.co/bftfKIRPxX
— TIMES18 (@TIMES18News) August 4, 2022
சிம்லாவில் கினானூர் என்ற இடத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானங்களை மூடியது. இந்த விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளின் எதிரொலியாக NH-5 நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பலத்த மழையால் உத்தராகண்ட் மாநிலத்திலும், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்படையினர் விரைந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்