திருநர்கள் திருமணத்துக்குக் கேரளக் கோயிலில் தடை! - கேரளா கொல்லங்கோட்டில் பரபரப்பு
கச்சம்குரிசி கோயிலில் திருமணம் செய்துகொள்ள திருநர் தம்பதி அனுமதி கோரிய நிலையில் கோயில் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருநர் தம்பதிகளின் திருமணம் ஒன்றுக்கு கேரளக் கோயிலில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொல்லங்கோட்டில் உள்ள கச்சம்குரிசி கோயிலில் திருமணம் செய்துகொள்ள திருநர் தம்பதி அனுமதி கோரிய நிலையில் கோயில் நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தம்பதிகளான நிலன் கிருஷ்ணா அத்வைகா இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே பாலக்காட்டில் உள்ள குறிப்பிட்ட கோயில் நிர்வாகத்தை திருமணம் செய்துகொள்வதற்காக அனுகியுள்ளனர்.நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அருகில் உள்ள ஒரு திருமணமண்டபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்
உடன் பணியாற்றும் சக ஊழியர்களும் இருவரது மேலாளர்களும் உடனிருந்து திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளனர்.
சதுர்பாஹு மகாவிஷ்ணு என அழைக்கப்படும் அந்தக் கோயில் கடவுள் பல நூற்றாண்டுகளாக அங்கே வீற்றிருப்பதாக அங்கு வழிபட வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில்தான் அந்தக் கோயிலுக்கு அபிஷேகமும் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து கோயில் நிர்வாகிகள் விளக்கம் கொடுக்கையில் ”இதுபோன்ற கோரிக்கைகள் இந்தக் கோயிலுக்கு இதுவே முதன்முறை. இதற்கு மக்களிடமிருந்து என்ன மாதிரியான எதிர்வினை இருக்கும் என எங்களூக்குத் தெரியாது.அதனால்தான் நாங்கள் அனுமதி மறுத்தோம்” எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாடில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள சுமார் 20,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 27 (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. ஹரிபாடில் உள்ள வழுதானம் படிஞ்சார மற்றும் வழுதானம் வடக்கு ஆகிய பகுதிகளில் இறந்த வாத்துகளில் காய்ச்சல் கண்டறியப்பட்டது. மேலும் வாத்துகளில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் எச்5என்1 துணை வகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தெரிவித்திருந்தார்.
தகவலின்படி, கடந்த வாரத்தில் காய்ச்சலால் சுமார் 1,500 வாத்துகளை விவசாயிகள் இழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இறந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவுகள் பறவைக் காய்ச்சல் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.