அந்த மாட்டு சந்தை என்ன விலை? பால்பண்ணை ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்! ஒரே இரவில் கோடீஸ்வரர்!
பால் பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967 ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருன்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் ஏழு வார குலுக்கல் நடைபெறுகிறது.
அந்தவகையில் நேற்று முன் தினம் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ. 12 கோடி என சொல்லப்பட்டிருந்தது. அதன்படி முதல் பரிசான ரூ.12 கோடி NJC 325526 என்ற எண்ணுக்கு விழுந்தது.
முதல் பரிசு டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வாங்கியுள்ளார். அவருக்கு வரி போக ரூ.6.12 கோடி கிடைக்க உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் “பால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 டிக்கெட்டுகள் வாங்குவேன். இதுவரை பரிசு அடித்தது இல்லை. இதுவே முதல் முறை.” எனத் தெரிவித்தார்.