மேலும் அறிய

Kerala In Newyork Times : இந்தியாவில் நாங்க மட்டும்தான்.. நியூயார்க் டைம்ஸில் இதற்காக இடம்பிடித்த கேரளா.. காரணம் என்ன தெரியுமா?

இதை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்

பிரபல சர்வதேச இதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை உலகின் 52 சிறந்த பார்வையிட வேண்டிய சுற்றுலாத்தலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மாநிலமான கேரளா இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரமும் கேரளா மட்டும்தான். 

இதை குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், அதில் ,“2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய 52 இடங்களில் கேரளாவை நியூயார்க் டைம்ஸ் தேர்வு செய்துள்ளது. கேரளாவின் வளமான கலாச்சாரம் மற்றும் அழகான நிலப்பரப்புகளை ரசிக்க அனைத்து பயணிகளையும் அனுமதிக்கும் சமூக சுற்றுலாவுக்கான எங்கள் முன்மாதிரியான அணுகுமுறை அதனால் பாராட்டப்பட்டுள்ளது. கேரள சுற்றுலாத்துறைக்கு இது மேலும் ஒரு பெரும் மகுடம்" எனத் தனது ட்வீட்டில் எழுதியுள்ளார். 

Kerala In Newyork Times : இந்தியாவில் நாங்க மட்டும்தான்.. நியூயார்க் டைம்ஸில் இதற்காக இடம்பிடித்த கேரளா.. காரணம் என்ன தெரியுமா?

கேரளாவைத் தவிர, இந்தப் பட்டியலில் லண்டன், ஜப்பானின் மொரியோகா, ஸ்காட்லாந்தில் உள்ள கில்மார்ட்டின் க்ளென், கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, நார்வேயின் ட்ரொம்சோ மற்றும் அல்பேனியாவின் வ்ஜோசா நதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

கேரளாவில் குறிப்பாக என்னென்ன இடத்தைச் சுற்றிப்பார்க்கலாம் என யோசிப்பவர்கள் கோவளத்திலிருந்து தொடங்கலாம்...

அடுத்தடுத்து மூன்று பிறை போன்ற கடற்கரை கொண்ட சர்வதேச புகழ் பெற்ற இடம் தான் கோவளம். அது 1930கள் முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்து வருகிறது. கடற்கரையில் இருக்கும் ஒரு பெரிய பாறை குளிப்பதற்கு பொருத்தமான அமைதியான கடற்கரையாக திகழ உதவுகிறது. கேரளாவின் தலை நகரமான திருவனந்தபுரம் கோவளத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. அங்கு செல்வதற்கு போக்குவரத்து உள்ளிட்ட எந்த பிரச்சனையும் கிடையாது

விடுமுறை நாட்களில் அங்கு சென்றால் கோவளத்திலேயே தங்கி அந்த நகரைச் சுற்றிப் பார்த்து வருவதற்கு மிகவும் ஏற்ற இடம். கோவளம் என்னும் பெயரே தென்னை மரங்களை பற்றி கூறுவதாக கூறுகின்றார்கள். அங்கு சென்று பார்த்தாலே அதற்கான பெயர் காரணம் நமக்கு புரியும். அரபிக்கடலின் ஒரு தென்னை சூழ்ந்த அழகியல் மிகுந்த கடற்கரையாக சுற்றுலா பயணிகளை ஈர்த்துக்கொண்டுள்ளது கோவளம்.

கோவளத்தில் இருக்கும் போது, நீங்கள் பார்க்க வேண்டிய முதல் இடம் கோவளம் கடற்கரையாகும், இங்கு மூன்று கடற்கரைகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த மூன்று கடற்கரைகளும் கோவளம் கடற்கரையை நகரத்தின் சிறந்த ஒன்றாக மாற்றுகிறது. கடற்கரைகள் பாறைகளால் பிரிக்கப்படுகின்றன. யாருக்கும் நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை, உள்ளே சென்றால், வானமகள் நாணி வேறு உடை சூடும் ஒரு அமைதியான பொன்மாலைப் பொழுதை கடற்கரை மணலில் நடந்துகொண்டே கழிக்கலாம்.

இந்த கடற்கரையின் மற்றொரு பெரிய ஈர்ப்பு, விழிஞ்சம் கடலின் மீன்வளமாகும், இது கடல்வாழ் உயிரினங்களை விரும்பும் மக்களுக்கு ஒரு முழுமையான சொர்க்கமாகும். கண்களுக்கு விருந்தளிக்கும் ஏராளமான கடல் வளங்களை இது கொண்டுள்ளது. மீன், பவளப்பாறைகள் மற்றும் பல நீர்வாழ் விலங்குகள் என கண்கொள்ளா காட்சிகள் காத்திருக்கும். 

கடற்கரை தவிர வேறு என்னென்ன உள்ளன?

இங்கு கடற்கரை தவிர பல்வேறு வகையான பொழுதுபோக்கு  அம்சங்கள் கிடைக்கின்றன. சூரியகுளியல், நீச்சல், மூலிகை மருந்து மசாஜ், சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள், கட்டுமர பயணம் ஆகியவை இங்கு மிகவும் பிரபலம்.இந்த கடற்கரையில் படும் வெப்பமான சூரிய ஒளி, உடலில் பட்டு வெகு விரைவில் உடலின் தோல் வண்ணத்தை மாற்றும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தக் கடற்கரை பிற்பகல் தொடங்கி இரவு வரை எப்போதும் ஆட்கள் மிகுந்து கலகலவென காணப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget