kerala: கள்ளக் காதலனை பார்க்க பேரக்குழந்தையுடன் லாட்ஜ்க்கு வந்த பாட்டி! தொட்டியில் இறந்த குழந்தை!
சிக்ஸிக்கு அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரான ஜான் பினோய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், அங்கமாலி பகுதியில் வசித்துவருபவர் சஜீஸ். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளது. சஜீஸ் மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் இரண்டு குழந்தைகளும் மனைவியின் தாயார் சிக்ஸியின் கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், சிக்ஸிக்கு அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரான ஜான் பினோய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் இவர்கள் பழக்கம் நெருக்கமாக மாற, ஒரு கட்டத்தில் சிக்ஸி தனது இரு பேரக்குழந்தையுடன் கொச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஜானை கணவர் என்று தெரிவித்து ரூம் எடுத்து தங்கியுள்ளார்.
குழந்தைகளை அழைத்து வந்ததால் கடும் அதிருப்தி அடைந்த ஜான், ஏன் பேரக்குழந்தைகளை அழைத்து வந்தாய் என்று சிக்ஸியுடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிக்ஸி அதற்குமேல் அறையில் இருந்தால் சண்டை பெரிது ஆகிவிடும் என்று எண்ணி சிறிது நேரம் வெளியே செல்ல, அந்த நேரத்தில் பாட்டி வெளியேறுவதை பார்த்து ஒன்றரை வயது குழந்தை பயங்கரமாக அழுதது.
ஏற்கனவே, கடும் கோவத்தில் இருந்த ஜான் ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிட்டுபோய் கழிவறையில் உள்ள பக்கெட்டில் குழந்தையை அமுக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை மூச்சுதிணறி இறந்தது. சமாதானம் அடைந்து சிக்ஸி அறைக்கு உள்ளே வந்து பார்த்தபோது குழந்தை சடலமாக கிடந்துள்ளது. இதைபார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட சிக்ஸி, வெளியே சொன்னால் இருவருமே மாற்றிக் கொள்வோம் என்றும், தனது ஆசை காதலனை காப்பாற்றும் நோக்கத்திலும் லாட்ஜ் ஊழியர்களிடம் குழந்தைக்கு தீடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிசெல்ல, பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த குழந்தை இயற்கைக்கு மாறாக இருப்பதாக சந்தேகித்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், குழந்தைக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் இருவரிடம் நடத்திய விசாரணையில், ஜான் பினோய் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சிக்ஸியையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்