மேலும் அறிய

Kerala Disaster: கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்; என்னதான் காரணம்? இதுதான் தீர்வு!

கேரளாவில் நேற்று ஒரு நாளிலேயே 333 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் ஏற்கெனவே இளகிக் கொண்டிருக்கும் மண்ணில் நீர் பாய்ந்தோடி, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடவுளின் தேசம் என எல்லோராலும் கொண்டாடப்படும் கேரளா, கொட்டித் தீர்க்கும் கன மழை, பாய்ந்தோடும் பெரு வெள்ளம், நடுங்க வைக்கும் நிலச்சரிவு என இயற்கைப் பேரிடர்களாலும் கொரோனா வைரஸ், நிஃபா வைரஸ், பறவைக் காய்ச்சல் என பயமுறுத்தும் வைரஸ் தொற்றுகளாலும் படகு விபத்துகளாலும் பேரழிவைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் 483 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காணாமல் போயினர். அடுத்த ஆண்டே மீண்டும் பருவமழை வெளுத்து வாங்க, கேரளா அடுத்த இடரை எதிர்கொண்டது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளில் சிக்கி 470 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து 2020-லும் கனமழை கொட்டியதில், பெட்டிமுடி பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில் கொரோனா வைரஸும் தாக்கியது.

மண்ணில் புதையுண்ட கிராமங்கள்

இந்த நிலையில் தற்போது 2024-ல் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 முறை ஏற்பட்ட நிலச்சரிவுகளால், 3 கிராமங்களே அடியோடு புதையுண்டு போயின. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய இடங்கள் உருக்குலைந்துள்ளன. ஒரு பள்ளியே மாயமானது. குழந்தைகள், முதியோர்கள் உட்பட 89 பேர் பலியாகி விட்டனர். நிறையப் பேர் நிலச்சரிவுக்குள் மாட்டிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Kerala Disaster: கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்; என்னதான் காரணம்? இதுதான் தீர்வு!

ஒவ்வொரு முறையும் இன்னல்களில் இருந்து கேரளா மீண்டெழுந்து வந்தாலும் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலச்சரிவுகள் குறித்துத் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாக, தென் மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் அடுத்தடுத்து இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட என்ன காரணம்? எப்படித் தடுக்கலாம்? என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தராஜனிடம் பேசினோம். அவர் ABP Nadu-விடம் கூறியதாவது:

’’தமிழ்நாட்டில் இருந்து குஜராத் வரை சுமார் 1.60 லட்சம்  சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலை நீண்டிருக்கிறது. உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றிய பழமையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை, இயல்பாகவே  மிகக் கடினமான பாறைகளைக் கொண்டது. இயற்கை நமக்குக் கொடுத்த இந்த பெருங்கொடையை நாம் அறிந்துகொள்ளவே இல்லை.

சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும்

மழைக்கும் சூழலுக்கும் பிரதானமாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை படிப்படியாக அழித்து வருகிறோம். மலைப் பகுதிகளிலேயே சுற்றுலா விடுதிகள், பவர் ஹவுஸ், அணைகள், சுரங்கங்கள் ஆகியவற்றைக் கட்டிவிட்டோம். குவாரிகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மேற்குத்தொடர்ச்சி மலையின் கற்களும் மண்ணும் இளகிக் கொண்டே இருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் சமவெளியில் வெள்ளமும் மலைப் பகுதியில் நிலச்சரிவும் ஏற்படுகின்றன.

Kerala Disaster: கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்; என்னதான் காரணம்? இதுதான் தீர்வு!

போதாதற்குப் புதைபடிமங்களை எரித்து சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். நிலச்சரிவுக்கு திடீர் பெரு மழை காரணம்தான். ஆனால் அந்தப் பெரு மழைக்கு மக்களின் செயல்பாடுகளும் அரசுகளின் ஒழுங்கற்ற போக்குமே காரணம். எந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டலாம், கட்டக் கூடாது என்று அரசு கண்டிப்பாக முடிவெடுக்கத் தவறிவிட்டது’’ என்று தெரிவித்தார்.

கேரளாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு குறித்தும் விளக்கினார்.

உந்தப்பட்ட நிலச்சரிவு (induced landslides)

’’கேரளாவில் பொதுவாக மே கடைசி வாரம் முதல் செப். கடைசி அல்லது அக். முதல் வாரம் வரை 3 ஆயிரம் மி.மீ. மழை பெய்யும். ஆனால் நேற்று ஒரு நாளிலேயே 333 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் ஏற்கெனவே இளகிக் கொண்டிருக்கும் மண்ணில் நீர் பாய்ந்தோடி, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதை உந்தப்பட்ட நிலச்சரிவு என்றே சொல்வேன்.

எப்படித் தடுக்கலாம்?

பேரழிவு தணிப்பு (Disaster Mitigation)

 ஒரு பேரிடர் ஏற்படுவதை முழுமையாகத் தவிர்க்க முடியாது என்றாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க வேண்டியது முக்கியம். இதற்கு உலகம் முழுவதும் கார்பன் உமிழப்படும் அளவு குறைப்பு, புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

தகவமைப்பு (Adaptation)

இது புதிய இயல்பு என்பதை ஏற்றுகொண்டு, அதற்கேற்றவாறு நம்மைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். பெரு மழை அடிக்கடி பெய்து வருவதால், அதற்கேற்ற வகையிலான கட்டுமானங்களில் கவனம் செலுத்த வேண்டும். நிலச்சரிவு எச்சரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பேரிடர் மீள் திறன் (Resilience)

எந்த ஒரு பேரழிவாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவது முக்கியம். அரசுகள் சமவெளிக்கும் மலைப் பகுதிகளுக்கும் ஏற்றவாறு தனித்தனியாக வெவ்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும்.

Kerala Disaster: கேரளாவை அதிகம் குறிவைக்கும் இயற்கைப் பேரிடர்கள்; என்னதான் காரணம்? இதுதான் தீர்வு!

மாதவ் கார்கில் குழு அறிக்கை, கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை, கேரள அரசின் அறிக்கை ஆகியவற்றைத் தொகுத்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனி மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிதாக எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழில்களையும் மீளாய்வு செய்ய வேண்டும்'’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

100 பேர் இறப்பதுதான் வளர்ச்சியா?

சுற்றுச்சூழல் குறித்துப் பேசுவதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே என்று கேட்டதற்கு, ‘’எது வளர்ச்சி? 100 பேர் இறப்பதுதான் வளர்ச்சியா? சூழலைக் காத்து, இயற்கையோடு இயைந்து வாழ்வது வளர்ச்சியா? தமிழ்நாட்டில் இன்னும் 3,000 மி.மீ. மழை பெய்யவில்லை. அவ்வாறு பெய்தால், கேரளாவுக்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை தமிழ்நாடுக்கு ஏற்படும்’’ என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

கன மழையும் பெரு வெள்ளமும் புதிய அன்றாடமாக மாறி வரும் நிலையில், அரசுகள் இனியாவது விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget