மேலும் அறிய

Kerala IAS officer: கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு ஆபாச ஸ்டிக்கர் பதில்.. ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தகாத முறையில் ஆபாச செய்தி அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தகாத முறையில் ஆபாச செய்தி அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அனுப்பிய மெசெஜின் ஸ்க்ரீன் ஷாட்களும் தற்போது வெளியாகியுள்ளன 

 ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் கேரள படகு மற்றும் இன்லாண்ட் நேவிகேஷன் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்துள்ளார். அப்போது ஆழ்கடல் மீன்பிடித்தல் தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் இந்த ஆண்டு துவக்கத்தில்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட்டுள்ளது அரசு. அது மீனவர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

Kerala IAS officer: கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு ஆபாச ஸ்டிக்கர் பதில்.. ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

இந்த சூழலில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த சர்ச்சைக்கு பதில் கேட்டு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த்தை அலுவல் ரீதியாக அணுகியுள்ளார். போனில் அழைத்தபோது அவர் பதிலளிக்காத காரணத்தால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். வாட்ஸ் அப்பில் தன்னை ஒரு பத்திரிகையாளர் என அறிமுகப்படுத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய செய்தியைப் பற்றி பேசுவதற்கு சரியான நேரமா? உங்கள் கருத்து என்ன என வினவியுள்ளார். இதையடுத்து பிரசாந்த் வெறும் ஸ்டிக்கரை அவருக்கு ரிப்ளை செய்துள்ளார்.

>>இதையும் படிக்க: இலங்கையில்: வரலாறு காணாத உணவுப் பஞ்சம்... திண்டாடும் மக்கள் என்ன காரணம்?

ஆனால் இந்த கேள்வி உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல, சர்ச்சை குறித்து பதிலளிக்க முடியுமா என பத்திரிகையாளர் மீண்டும் கேட்டுள்ளார். அப்போது ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி. அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளார் என்னவிதமான ஸ்டிக்கர் இது என கேள்வியெழுப்பியபோது மற்றொரு ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார். அது அந்த பெண் பத்திரிகையாளரை கடுமையாக புண்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் (KUWJ) சார்பில் முதல்வர் பினராயி விஜயனிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியின் செயலுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது பெண்களுக்கு எதிராக, அவர்களின் பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக திட்டுதல், மொபைல் போன் வழியாக ஆபாச படங்களையும், செய்திகளையும் பதிவிடுதலுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 -ன் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தகுந்த சட்ட ஆலோசனை பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

>> பாலிவுட்டின் நாயகிகளை கண்முன்னே கொண்டுவந்த பாக். நடிகை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Rasipalan: விருச்சிகத்துக்கு தன்னம்பிக்கை, துலாமுக்கு விவேகம்-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: விருச்சிகத்துக்கு தன்னம்பிக்கை, துலாமுக்கு விவேகம்- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Embed widget