(Source: ECI/ABP News/ABP Majha)
Kerala high court: தந்தையால் 10 வயது சிறுமி கர்ப்பம்! கருவை கலைக்க தாய் விருப்பம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்
தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, 30 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் 10 வயது சிறுமிக்கு கேரள உயர்நீதிமன்றம் கருக்கலைக்க அனுமதியளித்துள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, 30 வாரங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் 10 வயது சிறுமிக்கு கேரள உயர்நீதிமன்றம், திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனையால் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க (நேற்று) கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக 10 வயது சிறுமி, தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பம் அடைந்தார். அவரது வயிற்றில் வளரும் 30 வார கருவை கலைக்க சிறுமியின் தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, மனுவை விசாரித்த நீதி மன்றம், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவ குழுவினருக்கு பரிந்துரைத்தது.
சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில், தற்போதைய சட்டத்தின்படி, கருக்கலைப்பு 24 வாரங்கள் வரை மட்டுமே செய்ய முடியும். இந்த கால அவகாசம் முடிந்து விட்டதால் அனுமதி கோரி சிறுமியின் தாய் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். சிறுமிக்கு 10 வயதுதான் ஆவதால், கர்ப்பம் தரித்ததால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும், கருக்கலைப்பில் குழந்தை உயிர் பிழைக்கும் அபாயம் 80 சதவீதம் என்றும் மருத்துவ வாரியம் தெரிவிக்கிறது.
மேலும், அறுவை சிகிச்சை வாயிலாக கருவை கலைக்க முடியும். அப்போது வயிற்றில் உள்ள சிசு பிழைக்க 80 சதவீத வாய்ப்புள்ளது. சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது' என தெரிவித்தது.
இதையடுத்து, 'சிசு உயிருடன் பிறந்தால், மருத்துவ உதவிதேவைப்பட்டால் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடுமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுகாதாரப் பணிகள் இயக்குநர் எடுக்க வேண்டும். குழந்தை உயிருடன் இருந்தால் மருத்துவமனை நிர்வாகம் முழு மருத்துவ உதவியை வழங்க வேண்டும். வாதிகளால் முடியாவிட்டால் அரசும், குழந்தைகள் தொடர்பான நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "தந்தை சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தால், ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கப்பட வேண்டும், அவமானப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வமாக தகுந்த தண்டனை கிடைக்கும் என்பதை எங்கள் சட்ட அமைப்பு உறுதி செய்யும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்