Kerala: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு: திருவனந்தபுரத்தில் பரபரப்பு..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.
திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் தலைநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கட்சி அலுவகத்தில் குண்டு வீசியுள்ளார். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. (CCTV camera)
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகம் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் ( CPI (M)) கட்சியின் இளைஞரணியாக SFI -யால் தாக்குதலுக்குள்ளாகப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது குற்றம் சாடியது.
சி.சி.டி.வி., கேமராவின் காட்சிகளின் படி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவகம் மீது நேற்றிரவு 11.30 மணிக்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. AK Gopalan Centre அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய நபர்கள், தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
Kerala | A man on a two-wheeler captured on CCTV hurls a bomb at CPI (M) headquarters, AKG Center, Thiruvananthapuram
— ANI (@ANI) June 30, 2022
(Source: AKG Center CCTV) pic.twitter.com/cfP1zbChb0
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, போலீசார், வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விரைந்தனர்.
We strongly condemn the bomb attack on CPI(M) Kerala state committee office, AKG Centre last night.
— Sitaram Yechury (@SitaramYechury) July 1, 2022
We are confident that the government will Investigate thoroughly & punish the culprits.
We shall organise peaceful protests guarding against falling prey to any provocation.
Peaceful protests will be organized in the wake of the bomb attack on the AKG Center. In the last few days, there have been conscious attempts to turn the state into a riot ground and disrupt the law and order. The attack on the AKG Center is a continuation of that.
— CPI(M) Kerala (@CPIMKerala) July 1, 2022
- @b_kodiyeri pic.twitter.com/EG5Xhuenks
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்