பொங்கலை கொண்டாடும் கேரளா! - 6 மாவட்டங்களுக்கு விடுமுறை! எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டிய 6 மாவட்டஙக்ளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டிய 6 மாவட்டஙக்ளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இன்று போகி பண்டிகையுடன் பொங்கல் விழா தொடங்கியுள்ளது. ஜனவரி 14, 15, 16 தேதிகள் தொடர்ந்து பொங்கல் விழாவை சிறப்பிக்க தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல் பண்டிகையால் ஜவுளிக்கடை எங்கும் புத்தாடை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் கரும்பு, பூஜை சாமான்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை போன்ற பெருநகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதனால் ஜனவரி 14 முதல் 19ஆம் தேதிவரை தமிழக அரசு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

