Kedarnath Yatra: கனமழை எதிரொலி.. ஆரஞ்சு அலர்ட்.. கேதார்நாத் யாத்திரை தற்காலிக ரத்து..!
கனமழை காரணமாக உத்தரகண்ட் அரசு கேதார்நாத் புனித யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் முழுவது ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக உத்தரகண்ட் அரசு கேதார்நாத் புனித யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம், வடக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் காற்றின் காரணமாக மழை மேகங்கள் உருவாகியுள்ளன. இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்திலும் அண்டையில் உள்ள பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் உத்தரகண்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து கேதார்ந்தா புனித யாத்திரை ஒருங்கிணைப்பு குழு தரப்பில், இடைவிடாது கனமழை பெய்து வருவதால் யாத்திரிகள் அவர்களின் ஓட்டல் அறைகளுக்கே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போதைக்கு யாரும் மழைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. நாளையும் ஆரஞ்சு அலர்ட் தொடர்வதால் யாத்திரிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குப்த்காசி பகுதியில் 5000 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலையும் விதவிதமான அலர்ட்டுகளும்:
கனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும். அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்ட் என 4 வித எச்சரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில்,வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும் அளவுக்கு மழை பெய்யும் போதே இந்த ரெட் அலெர்ட் விடுக்கப்படும்.
அடுத்ததாக ஆம்பர் அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்பதை குறிக்கும் வகையில் யெல்லோ அலர்ட் விடுக்கப்படுகிறது.
ஒருவேளை வானிலை ரீதியாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு க்ரீன் அலர்ட் ஆகும்.
ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
இப்போது உத்தரகண்ட் மாநிலத்தில் விடுக்கப்பட்டுள்ளது ஆரஞ்சு அலர்ட். இது இன்றும் நாளையும் தொடரும்.