KCR National Party: கட்சிப் பெயரை மாற்றி தேசிய அரசியலில் நுழைந்த கே.சி.ஆர்
KCR National Party: தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் தனது தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி எனும் கட்சியை பாரத் ராஸ்டிரிய சமிதி என பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
KCR National Party: தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் தனது தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி எனும் கட்சியை பாரத் ராஸ்டிரிய சமிதி என பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அண்மையில் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். இவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். அத்துடன் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார்.
Hyderabad | TRS president and CM KC Rao speaks at the party's general body meeting in Telangana Bhavan as the party has been renamed 'Bharat Rashtra Samithi' (BRS) pic.twitter.com/eBteol2Cih
— ANI (@ANI) October 5, 2022
இந்நிலையில் இன்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் தனது தெலுங்கானா ராஸ்டிரிய சமிதி எனும் கட்சியை பாரத் ராஸ்டிரிய சமிதி என பெயர் மாற்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். புதிய கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சியின் பெயரினை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சியின் தொடக்க நாள் கொண்டாட்டத்தில் சந்திரசேகரராவ் அக்கட்சி தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று முடிவை அறிவித்தார். அதில், “அரசியல் காரணங்களுக்காக பாஜக மதம் சார்ந்த விஷயங்களை முன்னெடுப்பதால் அதை எதிர்த்து தேசிய அரசியலில் களமிறங்க உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.
టీఆర్ఎస్ పార్టీ సర్వసభ్య సమావేశంలో మాట్లాడుతున్న పార్టీ అధినేత, ముఖ్యమంత్రి శ్రీ కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు.
— TRS Party (@trspartyonline) October 5, 2022
TRS Party President and CM Sri K Chandrashekar Rao speaking at the party's general body meeting at Telangana Bhavan. pic.twitter.com/YfW1kr1CF5
அதைத் தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சந்திரசேகரராவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பாஜக அல்லாத அரசு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு முன்பாக தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்க சந்திரசேகரராவ் முடிவு கவனத்தினை ஏற்படுத்தியுள்ளது.