நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட சலுகை - மகிழ்ச்சில் தியேட்டர் உரிமையாளர்கள்.
கர்நாடகாவில் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
![நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட சலுகை - மகிழ்ச்சில் தியேட்டர் உரிமையாளர்கள். karnataka theaters can run with cent percent capacity for four days நான்கு நாட்களுக்கு வழங்கப்பட்ட சலுகை - மகிழ்ச்சில் தியேட்டர் உரிமையாளர்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/04/5e6855e83e152ed6bae76d7c399cb8da_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய அளவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வருகின்றது. முதல் அலையைவிட கொரோனாவின் இந்த இரண்டாம் அலை சற்று தீவிரமாகவே பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பல தடைகளை விதித்து செயல்படுத்தி வருகின்றது. இதில் ஒரு அங்கமாக கர்நாடகாவில் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்களும் குறிப்பாக நடிகர் புனித் ராஜ்குமாரும் அரசிடம் கோரிக்கையை முன்வைத்தனர். திரையரங்குகள் 100 சதவிகித இறக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் கர்நாடக அரசை வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று பெங்களூரு காவேரி இல்லத்தில் மந்திரிகளை சந்தித்தார் முதல்வர் எடியூரப்பா.

Thanks to all the love & support ❤️#FullOccupancyInTheatres #Yuvarathnaa #PowerInU pic.twitter.com/xauilpjJTT
— Puneeth Rajkumar (@PuneethRajkumar) April 3, 2021

இந்த சந்திப்பில் இன்று தொடங்கி வரும் 7ம் தேதி வரை திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடம் செயல்படலாம் என்றும். மீண்டும் ஏப்ரல் 8ம் தேதி முதல் 50 சதவிகித இருக்கைளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)