மேலும் அறிய

Ola Uber Auto Ban: 3 நாட்கள் கெடு; ஓலா, உபர் ஆட்டோக்களுக்கு முற்றிலும் தடை விதித்த அரசு - காரணம் என்ன?

Karnataka Ola Uber Auto Ban: அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த செயலிகள் மூலம் செயல்படுவது சட்டத்திற்கு எதிரானது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த செயலிகள் மூலம் இயங்கும் ஆட்டோக்களின் சேவைகள்  மட்டும்  தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

டெல்லி, மும்பை, சென்னை பெங்களூரு, ஹத்ரபாத் போன்ற மிகவும் பரபரப்பான பெரு நகரங்களில் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கான போக்குவரத்துகளில், பொது போக்குவரத்துகளுக்குப் பிறகு இன்று தவிர்க்க முடியாத இடத்தினை பிடித்திருப்பது, செயலிகள் மூலம் இயங்கும் ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பைக்குகள் தான். அதிலும் தொழில்நுட்பம் வளர வளர செயலிகளை கொண்டு செயல்படும் வாகனங்களின் எண்ணிக்கையும், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அதேபோல், தொடக்கத்தில் மிகவும் தகுந்த கட்டணங்களுக்கு சேவையை வழங்கி வந்த ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள், தங்களுக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கட்டணங்களின் அளவினையும் கணிசமாக ஏற்றி வருகிறது. அதிலும், சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும், விழாக்காலங்களில் ஒரு கட்டணமும், இரவு நேரங்களில் ஒரு கட்டணமும், மழை காலங்களில் ஒரு கட்டணமும் என நிறுவனங்கள் இஷ்டத்திற்கு தங்களின் சேவைக் கட்டணங்களை நிர்ணயித்து வருவதாக மக்கள் குற்றஜ்ம் சாட்டி வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிற்கும் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கர்நாடகாவில் 292 புகார்கள் பதிவு செய்யப்பட்டுளது. இதனை கவனத்தில் கொண்ட, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான  கர்நாடக அரசு, புதிய அரசாணையினை பிறப்பித்துள்ளது. அதில், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஓலா, உபர், ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் செயல்படும் ஆட்டோக்களுக்கு மட்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அரசாணையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் செயலிகள் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த தொகையினை விடவும் அதிக கட்டணங்கள் செலுத்தி பயணிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

அரசு ஏற்கனவே முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 30 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் என அரசு ஏற்கனவே கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதேபோல், வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கர்நாடகாவில் உள்ள ஆட்டோ சங்கங்கள் “நம்ம யாத்ரி” எனும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget