Congress Releases 500 Cr: பாஜகவின் முன்னாள் அமைச்சரின் புகைப்படத்தோடு ரூ.500 கோடி நோட்டை வெளியிட்ட காங்கிரஸ்... எதற்காக தெரியுமா?
எம்.எல்.ஏ-க்களை பாஜக வாங்க முயற்சிப்பதாக, பாஜக தலைவரின் புகைப்படத்துடன் கூடிய ரூ.500 கோடி நோட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
500 கோடி பணத்தாள்
காங்கிரஸ் எம்.எல்.ஏவை வாங்க ரூ.500 கோடி தருவதாக கர்நாடக பாஜகவின் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் பாஜக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் படத்துடன் கூடிய 500 கோடி ரூபாய் நோட்டை கர்நாடக காங்கிரஸ் வெளியிட்டது.
'@ikseshwarappa ಅವರು ಕಾಂಗ್ರೆಸ್ ಶಾಸಕರಿಗೆ 500 ಕೋಟಿ ಆಮಿಷ ಒಡ್ಡಿದ್ದೆ ಎಂದು ಹೇಳಿರುವುದರಲ್ಲಿ ಯಾವ ಆಶ್ಚರ್ಯ, ಅನುಮಾನಗಳೂ ಇಲ್ಲ.
— Karnataka Congress (@INCKarnataka) November 4, 2022
ತೆಲಂಗಾಣದಲ್ಲಿ 150 ಕೋಟಿಯ ಡೀಲ್ನಲ್ಲೂ ನಿಮ್ಮದೇ ನೋಟ್ ಎಣಿಸುವ ಮಿಷನ್ ಕೆಲಸ ಮಾಡಿತ್ತೆ ಈಶ್ವರಪ್ಪನವರೇ?
40% ಕಮಿಷನ್ ಲೂಟಿಯನ್ನು ಕರ್ನಾಟಕದ ನಂತರ ತೆಲಂಗಾಣದಲ್ಲಿ ಇನ್ವೆಸ್ಟ್ ಮಾಡ್ತಿದೀರಾ? pic.twitter.com/jkNiriNwde
ஆபரேஷன் கமலா கரன்சி'
அந்த 500 ரூபாய் கோடி பணத்தாளில், கர்நாடக பாஜகவின் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இது 'குதிரை பேரம்', 'ஆபரேஷன் கமலா கரன்சி' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாஜகவில் சேர ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.500 கோடி தருவதாக நான் உறுதியளிக்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 500 கோடி ரூபாய் சர்ச்சை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்தம் தொடர்பாக சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில் 40 சதவீத கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அந்த பிரச்சினை தொடர்பாக ஈஸ்வரப்பாவையும், பாஜக அரசாங்கத்தையும் காங்கிரஸ் குற்றம் சாட்டி 500 கோடி ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.500 கோடி தருவதாக அவர் கூறியதில் ஆச்சரியமோ, சந்தேகமோ இல்லை. தெலுங்கானாவிலும் சொந்த நோட்டுகளை எண்ணும் பணியில் ஈஸ்வரப்பா வேலை செய்தாரா என்றும் கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தெலுங்கானாவில் 40% கமிஷன் கொள்ளையை முதலீடு செய்யவுள்ளாரா என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தெலுங்கானா சர்ச்சை:
இதற்கு தெலங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக, தெலங்கானா முதலமைச்சரும், ராஷ்டிர சமிதியின் கட்சி தலைவருமான சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால், இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வீடியோவை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் , காங்கிரஸ் 500 கோடி ரூபாய் நோட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: தமிழக ஆளுநரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை - ஆளுநர் தமிழிசை