ஒரே நேரத்தில் இரண்டு காதலி.. கடற்கரையில் சமாதானம் பேசப்போய் உயிரிழந்த காதலன்!
கர்நாடகா மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற 2வது காதலியை மீட்க சென்று காதலன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாய்டு டிசோசா என்பவர், அபுதாபியில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊர் திரும்பிய டிசோசா, ஒரு வருடம் இந்தியாவில் தங்க திட்டமிட்டுள்ளார். நாடு திரும்பியதும் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் 2 பெண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
நாளடையில் அந்த பழக்கம் காதலாக மாற ஒரே நேரத்தில் லாய்டு டிசோசா இருவரையும் காதலித்து வந்துள்ளார். முதல் காதலியிடம் பழகி வந்தபோது, 2 வது காதலியுடன் தனக்கு வேலை இருக்கிறது என்று தெரிவித்தும், 2 வது காதலியை சந்திக்கும்போது முதல் காதலியை தவிர்த்தும் வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த விஷயம் இரண்டு பெண்களுக்கும் தெரியவர பிரச்னை பூதகரமாக வெடித்துள்ளது. இதனால் தொடர்ந்து இருவரும் லாய்டு டிசோசாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொறுமை இழந்த டிசோசா தனது இரு காதலிகளையும் அழைத்து கொண்டு அருகில் உள்ள சோமேஷ்வரா கடற்கரை சென்றுள்ளார்.
இருவரிடம் சமாதனத்தை ஏற்படுத்த முயற்சித்தபோது இருவரும் முன்னுக்கு பின் முரணாக சண்டையிட்டுள்ளனர். இவர் எனக்குதான்.இல்லை எனக்குதான் என்று வாக்குவாதம் நீண்டுகொண்டே சென்றுள்ளது. ஒரு நேரம் வரை பொறுமையாக இருந்த 2 வது காதலி நேராக ஓடிச்சென்று கடலுக்குள் விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து பதறிப்போன டிசோசா அந்த பெண்ணை காப்பாற்ற தண்ணீர்க்குள் குதித்துள்ளார். எப்படியோ தனது 2 வது காதலியை காப்பாற்றி கரை சேர்ந்த நேரத்தில் டிசோசாவை நீரோட்டம் உள்ளே இழுத்து சென்றுள்ளது.அவரால் எவ்வளவோ முயற்சி செய்தும் அலையில் தாக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் டிசோசாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்பொழுது அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் டிசோசா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
''நான் ஹோம் வொர்க் செய்த ஒரே பாடல் இதுதான்!'' - இசையமைப்பாளர் இளையராஜா ஷேரிங்ஸ்!
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்