மேலும் அறிய

Karnataka Election: சித்தராமையா, சிவக்குமாருக்கு புதுப்போட்டி..! இது என்னடா காங்கிரசுக்கு வந்த சோதனை..? கர்நாடகாவில் புது ட்விஸ்ட்..!

முதலமைச்சர் பதவியை தருவதில் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை குழம்பி வரும் நிலையில், தற்போது மூன்றாவது தரப்பு முதலமைச்சர் பதவியை கேட்டு களத்தில் குதித்துள்ளது.

கர்நாடக தேர்தலில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வருகிறது. 

கர்நாடக தேர்தல் முடிவுகள்:

கடந்த 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கான முடிவுகள் 13ஆம் தேதி வெளியாகின. இதில், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களை கைப்பற்றி மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது.

இதையடுத்து, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது காங்கிரஸ். அந்த வகையில், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், டெல்லி தலைமையிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.

முதலமைச்சர் பதவிக்கு போட்டா போட்டி:

முதலமைச்சர் பதவியை தருவதில் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை குழம்பி வரும் நிலையில், தற்போது மூன்றாவது தரப்பு முதலமைச்சர் பதவியை கேட்டு களத்தில் குதித்துள்ளது. இது, அக்கட்சிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க சாதி பிரிவான லிங்காயத்தினர், தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"தற்போது வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 34 பேர் லிங்காயத்தி சமூகத்தினர். எனவே, எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே முதலமைச்சர் பதவி தர வேண்டும்" என லிங்காயத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில பாரத வீரசைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.

போட்டியில் குதித்த மூன்றாவது தரப்பு:

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கிய காரணம் லிங்காயத் சமூகத்தினர். கர்நாடகாவில் அரசியல் ரீதியாகவும் எண்ணிக்கையின் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க சாதி பிரிவான லிங்காயத்தினர், பாரம்பரியமாக, பாஜகவுக்கு வாக்களித்து வந்தனர்.

ஆனால், லிங்காயத் சமூகத்தினர், இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. லிங்காயத் சமூகத்தினரை போலவே, தலித் சமூகத்தினரும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

34 எம்.எல்.ஏ.க்கள்:

தலித் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தும்கூரில் நடைபெற்ற கூட்டத்தில், தலித் ஒருவர் முதல்வர் ஆக வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தப்பட்டது.

அகில இந்திய வீரசைவ மகாசபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 46 வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியதாகவும் அவர்களில் 34 பேர் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
 
தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget