மேலும் அறிய

'இளைஞர்களுக்கு வழிவிடுங்க..' நோ சொன்ன பா.ஜ.க..! 'நான் தேர்தல்ல நிப்பேன்' அடம்பிடிக்கும் முன்னாள் முதல்வர் - கர்நாடகாவில் விறுவிறு..!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டருக்கு பா.ஜ.க. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் மே 10-ந் தேதி அந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. தன்னுடைய மகனுக்கு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். இது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஷ் சட்டர்:

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க.விற்கு மற்றொரு பின்னடைவாக அந்த மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் சட்டர் கூறிய கருத்து அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டர். 67 வயதான இவர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கட்சியின் மூத்த தலைவர்களிடம் இருந்து எனக்கு குறுஞ்செய்தி வந்தது.

இளைஞர்களுக்கு வழிவிடுங்க..' நோ சொன்ன பா.ஜ.க..! 'நான் தேர்தல்ல நிப்பேன்' அடம்பிடிக்கும் முன்னாள் முதல்வர் - கர்நாடகாவில் விறுவிறு..!

அதில், "நான் மூத்தவர், முன்னாள் முதலமைச்சர் என்பதால் மற்றவர்களுக்கு வழிவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை அவர்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தால் எனக்கு மரியாதையாக இருந்திருக்கும். ஆனால், வேட்புமனுத்தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் எனக்கு மிகவும் வேதனையாகி விட்டது.

நான் அவர்களிடம் நான் இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று கூறிவிட்டேன். நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனால் உங்களது முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்து தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை அளிக்க வேண்டும். நான் அவர்களிடம் ஏன் நான் இந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கேட்டேன். என்னுடைய குறைகள் என்ன? என்று கேட்டேன்.“

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர்:

முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் சட்டர் கர்நாடக மாநிலத்திலே மிகவும் புகழ்பெற்ற தலைவராக உள்ளார். அவர் இதுவரை கர்நாடக சட்டமன்றத்திற்கு 6 முறை தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற ஒவ்வொரு முறையும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றே வெற்றி பெற்றுள்ளார்.

இளைஞர்களுக்கு வழிவிடுங்க..' நோ சொன்ன பா.ஜ.க..! 'நான் தேர்தல்ல நிப்பேன்' அடம்பிடிக்கும் முன்னாள் முதல்வர் - கர்நாடகாவில் விறுவிறு..!

கர்நாடகவில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த ஜெகதீஷ் சட்டருக்கே கட்சியில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்த விவகாரம் அந்த மாநில பா.ஜ.க.வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1955ம் ஆண்டு பெங்களூரில் பிறந்த ஜெகதீஷ் சட்டர் கர்நாடகாவின் 15வது முதலமைச்சர் ஆவார். 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கர்நாடகவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.  2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை கர்நாடக மாநில சட்டசபை தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: ஐ.பி.எல். போட்டிக்கு பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணி: பேரவையில் கலாய்த்துவிட்ட அமைச்சர் உதயநிதி!

மேலும் படிக்க: Chinmayi On Dalailama: 'சவுக்கடி தர வேண்டும்.. வெட்கப்படுங்கள்..' தலாய்லாமா விவகாரத்தில் கொந்தளித்த சின்மயி..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget