மேலும் அறிய

ஷார்ட்ஸில் சிறுநீர் கழித்த 3 வயது சிறுவன்.. பிறப்புறுப்பில் சூடுவைத்த அங்கன்வாடி உதவி ஆசிரியை!

கர்நாடக மாநிலத்தில் 3 வயது சிறுவன் அவனது ஷார்ட்ஸில் சிறுநீர் கழித்ததால் கோவமடைந்த அங்கன்வாடி உதவி ஆசிரியர் சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் 3 வயது சிறுவன் அவனது ஷார்ட்ஸில் சிறுநீர் கழித்ததால் கோவமடைந்த அங்கன்வாடி உதவி ஆசிரியர் சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள கோடேகெரே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் 3 வயது சிறுவன் அடிக்கடி தனது பேண்ட்டில் சிறுநீர் கழித்துள்ளார். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த 28 வயதான அங்கன்வாடி உதவி ஆசிரியை ரஷ்மி, கோவத்தில் தீக்குச்சிகள் கொண்டு சிறுவனில் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார். 

கடந்த திங்கள்கிழமை சிறுவனின் பாட்டி அவரை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, குழந்தையின் பிறப்புறுப்பு மற்றும் வலது மடியில் தீக்காயங்கள் இருப்பதை அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு குடும்பத்தினர் கொண்டு சென்றதால், அவர்கள் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பவித்ராவுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சிறுவனின் வீட்டிற்கு சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து, உடனடியாக அந்த அங்கன்வாடி ஆசிரியர் நாகரத்னா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆசிரியர் ரஷ்மி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக தீக்காயங்கள் இருந்த போதிலும் குழந்தை நலமாக உள்ளது. சிக்கநாயக்கனஹள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து அங்கன்வாடி ஆசிரியர் நாகரத்னா கூறும்போது, “ரஷ்மி குறும்புக்காரர். அவள் கடந்த காலத்தில் என் கையெழுத்தை கூட போலியாக போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறாள். இப்போது, நான் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் தாயை இழந்த சிறுவன் : 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அந்த சிறுவன் தனது தாயை இழந்துள்ளான். தற்போது இந்த சிறுவனை அவரது தந்தையும் பாட்டியும் கவனித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் இருக்கிறார். சிறுவனின் பெற்றோர் சிக்மகளூரில் உள்ள ஒரு காபி எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளனர். அவரது தாயார் மறைவுக்கு பிறகுதான் இவர்கள் கோடேகெரேவுக்கு குடிபெயர்ந்தனர்.

ஆசிரியை மீது வழக்குப்பதிய பட்டதா..? 

குற்றம் சாட்டப்பட்ட ரஷ்மிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ரஷ்மியின் நான்கு வயது மகனும் அதே மையத்தில் படித்து வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 17 குழந்தைகளும் அங்கு படித்து வருகின்றனர். தாலுகா குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரின் பரிந்துரையின் பேரில் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை துணை இயக்குநர் ஸ்ரீதர் எம்.எஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
IPL 2025 CSK vs RR: காட்டடி அடித்த ராணா! கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்! கம்பேக் தருமா சென்னை?
IPL 2025 CSK vs RR: காட்டடி அடித்த ராணா! கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்! கம்பேக் தருமா சென்னை?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
IPL 2025 CSK vs RR: காட்டடி அடித்த ராணா! கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்! கம்பேக் தருமா சென்னை?
IPL 2025 CSK vs RR: காட்டடி அடித்த ராணா! கடைசியில் கட்டுப்பட்ட ராஜஸ்தான்! கம்பேக் தருமா சென்னை?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
IPL 2025 CSK vs RR: செஞ்சு விட்ட ராணா! அடி வாங்கினாலும் அவுட்டாக்கிய அஸ்வின்!
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Embed widget