Kangana Ranaut Reaction: இந்தி நம்முடைய தேசிய மொழி... அஜய் தேவ்கன் கூறியதில் தவறில்லை- நடிகை கங்கனா
இந்தி நம்முடைய தேசிய மொழி தான் இன்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
![Kangana Ranaut Reaction: இந்தி நம்முடைய தேசிய மொழி... அஜய் தேவ்கன் கூறியதில் தவறில்லை- நடிகை கங்கனா Kangana Ranaut Reaction on Kiccha Sudeep vs Ajay Devgan Hindi National Language Twitter Debate Kangana Ranaut Reaction: இந்தி நம்முடைய தேசிய மொழி... அஜய் தேவ்கன் கூறியதில் தவறில்லை- நடிகை கங்கனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/29/9c684730906392b9408237c81e897c02_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா திரையுலக நடிகர் கிச்சா சுதீப் இந்தி தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார். அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பதில் பதிவை செய்திருந்தார். அதாவது இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்ற கருத்தை அஜய் தேவ்கன் பதிவு செய்திருந்தார். அதற்கு பலரும் தங்களுடைய விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்று தன்னுடைய அடுத்த திரைப்படத்தி டிரையலரை வெளியிட்டார். அந்த விழாவில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் அஜய் தேவ்கனின் ட்விட்டர் பதிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு கங்கனா ரனாவத், “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தி தேசிய மொழி தான். ஆகவே பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழி நம்முடைய தேசிய மொழி என்று தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை. ” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)