Kangana Ranaut on Mahatma Gandhi: யார் சூப்பர் ஹீரோ? காந்தியை வம்புக்கு இழுக்கும் கங்கனா.! மீண்டும் சர்ச்சை!!
சுதந்திரம் தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் கங்கனா.
பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் கங்கனா பாஜகவின் ஆதரவாளரும்கூட.
இந்த சூழலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா ரணாவத், "உண்மையிலேயே 2014ஆம் ஆண்டுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. 1947ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?" என்று பேசினார். இந்தப் பேச்சை கண்டித்து கங்கானவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில், இந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் கங்கனா. இந்த முறை அவர் காந்தியையும், நேதாஜியையும் இழுத்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், பழைய பேப்பர் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ள கங்கனா,
நீங்கள் காந்தி ரசிகராகவோ அல்லது நேதாஜி ஆதரவாளராகவோ இருக்கலாம். நீங்கள் இருவருமாக இருக்க முடியாது. யோசித்து முடிவு செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த செய்தித்தாளில், 'காந்தி உள்ளிட்ட மற்றவர்கள் நேதாஜியை ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள அவர், பகத்சிங்கையோ, நேதாஜியையோ காந்தி ஆதரிக்கவில்லை. காந்திஜி பகத்சிங்கை தூக்கிலிட விரும்பினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன...எனவே நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினால் மட்டுமே போதாது. சூப்பர் ஹீரோக்களையும் அவர்களின் வரலாறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். காந்தி தொடர்பான கங்கனாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்ச்சையாக பேச வேண்டுமென்றே கங்கனா களம் இறங்கி இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, சுதந்திரம் குறித்து பேசிய கங்கனாவின் த்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்தன. அது குறித்து கருத்து தெரிவித்த கங்கனா, நான் மட்டும் காங்கிரஸை பிச்சைக்காரன் என்று சொல்லவில்லை" என்று கூறி காங்கிரஸை "பிச்சைக்காரன்" என்று அழைத்தது தொடர்பாக ஒரு வரலாற்று புத்தகத்தின் கருத்துகளை மேற்கோள் காட்டியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்