வந்தே பாரத் இருக்கைக்கு தகராறு! பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள் பயணி மீது தாக்குதல்! பரபரப்பு வீடியோ
எம்.எல்.ஏ ராஜீவ் சிங் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர், ஜான்சி நிலையத்தில் ரயிலில் ஏறி, போபாலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த அந்த நபரைத் தாக்கிய கடுமையாக தாக்கியுள்ளனர்.

டெல்லி-போபால் வந்தே பாரத் ரயிலில் பாஜக எம்எல்ஏவுடன் இருக்கையை மாற்ற மறுத்ததால் பயணி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ:
உத்தரபிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பாஜகவின் ராஜீவ் சிங், தனது மனைவி மற்றும் மகனுடன் தனது தொகுதியான ஜான்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மனைவி மற்றும் மகனுக்கு அருகருகே இருக்கை கிடைத்திருக்கிறது, ஆனால் அவருக்கும் வேறு ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது.
பயணியுடன் வாக்குவாதம்:
இதனை அடுத்து எம்.எல்.ஏ ராஜீவ் சிங் மற்றும் பயணிக்கும் இடையே இருக்கை மாற்ற விவகாரத்தில் மோதல் ஏற்ப்பட்டதாக தெரிகிறது. எம்.எல்.ஏ ராஜீவ் சிங் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர்,இந்த நிலையில் எம்.எல்.ஏவுக்கு தொடர்புடைய சிலர் ஜான்சி நிலையத்தில் ரயிலில் ஏறி, போபாலுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த அந்த நபரைத் தாக்கிய கடுமையாக தாக்கியுள்ளனர்.
சரமாரி தாக்குதல்:
பயணியை எம்.ஏல்வின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பயணியின் மூக்கிலிருந்து ரத்தம் வழிவதையும், அவரது உடைகள் இரத்தத்தில் நனைந்திருப்பதையும் காண முடிகிறது
இந்த சம்பவத்தை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் (ஜான்சி) விபுல் குமார் ஸ்ரீவஸ்தவா, இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
🚨 Passenger Safety a Joke in Indian Railways
— Everyday Pursuits (@evrydaypursuit) June 23, 2025
A group linked to Jhansi's BJP MLA @rajeevsinghmla assaulted a person in the Executive Class of the premium Vande Bharat for refusing to switch seats
No action against him yet @myogiadityanath#VandeBharat #IndianRailways #Trains #BJP pic.twitter.com/E4OW9xQflb
எம்,எல்.ஏபுகார்:
ஜான்சியில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை (GRP), திரு. சிங்கிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து, non-cognizable report (NCR) பதிவு செய்துள்ளதாகக் கூறினார்
தனது மனைவி மற்றும் மகனுடன் பயணம் செய்தபோது, சக பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக திரு. சிங் தனது புகாரில் குற்றம் சாட்டியதாக, செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அந்த நபர் தனது குடும்பத்தினரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பின்னர் ஜான்சி நிலையத்தில் உள்ள மற்றவர்களை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட பயணி போபாலை அடைந்த பிறகு புகார் அளிப்பதாக முன்னதாகவே தெரிவித்ததாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் (ஜான்சி) விபுல் குமார் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





















