ஜனநாயகம் இயக்குனர் வினோத் பழனி முருகன் கோவிலில் தரிசனம்! விஜய் படம் ரிலீசுக்கு முன் முக்கிய முடிவு?
ஜனநாயகன்பட இயக்குனர் வினோத் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஆன்மீக ஸ்தலமாக உள்ளது பழனி முருகன் கோவில், தமிழ்கடவுள் என்றழைக்கப்படும் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அதிக வருவாய் கிடைக்கக்கூடிய கோவிலாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கந்த சஸ்டி விழா நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போதும் முருக பக்தர்கள் பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து செல்கிறனர்.

அதேபோல பிரபல சினிமா நடிகர்கள், அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. நடிகை சமந்தா, கெளதம் கார்த்திக் , மஞ்சிமா மோகன், சந்தானம், என பல்வேறு திரைபிரபலங்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்ய பழனி முருகன் கோவில் வந்துள்ளார்.
இந்த நிலையில் ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, ஜனநாயகம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வினோத் அவர்கள், தற்போது நடிகரும் தமிழக வெற்றி. கழகம் தலைவருமான விஜய்யை வைத்து ஜனநாயகம் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படமானது நவம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில, பழனி மலை கோவிலில் சாமிகரசம் செய்ய வருகை தந்துள்ளார்.

படிப்பாதை வழியாக மலைமேல் ஏறி, சாயரட்ச்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் உள்ள முருகனை சுவாமியை தரிசித்தார். இயக்குநர் வினோத் அவரை காண வந்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் அவர் ரோப் கார் வழியாக கோவிலில் இருந்து கீழே இறங்கி அடிவாரம் வந்தடைந்தார். அவருடன் இயக்குநரின் நெருங்கிய நண்பர் நந்தன் மற்றும் உடன்பிறப்பு இயக்குநர் ரா. சரவணன் ஆகியோரும் இணைந்து வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்களே ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பொங்கலுக்கு முந்தியே ரிலீஸ் ஆக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் தான் விஜய்யின் கடைசி படமாகும். இப்படம் நவம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.





















