மேலும் அறிய

உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் ரத யாத்திரை 2022: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் யாத்திரையை நடத்த ஒடிசா தயாராகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புரி ஜெகன்நாதர் யாத்திரை என்பது ஆஷாத் மாதம் சுக்ல பக்‌ஷ இரண்டாவது தினத்தில் நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் யாத்திரையை நடத்த ஒடிசா தயாராகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் புரி ஜெகன்நாதர் யாத்திரை என்பது ஆஷாத் மாதம் சுக்ல பக்‌ஷ இரண்டாவது தினத்தில் நடைபெறுகிறது. ஜெகன்நாதர் தனது சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் இணைந்து தேரில் பவணி வரும் காட்சி கண்கொள்ளாத காட்சியாக இருக்கும்.

புரி தேர் திருவிழா வரலாறு:

புரி ரத யாத்திரை என்பது ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டுதோறும், தனித்தனியாக மூன்று ரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர். ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது. தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான புரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.குந்திச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

ஜூலை 1, 2022:
இந்த ஆண்டு புரி ஜெகன்நாதர் திருவிழாவென்பது ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும். இந்த ஆண்டு சுக்ல் திவிதிய திதி என்பது ஜூன் 30 ஆம் தேதி காலை 10.49க்கு ஆரம்பித்து ஜூலை 1 காலை 1.09 மணிக்கு முடிவடைகிறது. ஜெகன்நாதர் யாத்திரை ஜூலை 1 வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது.

இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget