Khwaja Sayyad Chishti : பட்டப்பகலில் இஸ்லாமிய மதகுரு சுட்டுக்கொலை.. ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்..
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் மதகுரு மஹாராஸ்டிராவில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியர்களின் மதகுரு மஹாராஸ்டிராவில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நெற்றியில் சுட்டு கொலை:
மகாராஸ்டிராவின் யோலா பகுதியைச் சேர்ந்தவர் சஃபி பாபா என்கிற கவாஜா சையது சிஸ்டி. இவர் ஆப்கானிஸ்தா நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த செவ்வாயன்று மும்பையில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எம்ஐடிசி பகுதியில் உள்ள பகுதியில் திறந்தவெளியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டார். துப்பாக்கியைக் கொண்டு அவர் நெற்றியில் சுட்டதில் சஃபி பாபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஃபி பாபா உயிரிழந்ததை உறுதி செய்த கும்பல் அவர் பயன்படுத்திய சொகுசு காரை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
சஃபி பாபாவை யார் கொன்றார்கள், எதற்காகக் கொன்றார்கள் உள்ளிட்ட எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. யேலோ பகுதி காவல்நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட்டிக்கப்பட்ட அகதி பாஸ்:
35 வயதான சஃபி பாபா மகாராஸ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலா பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அவருக்கு இந்திய அரசு அகதி பாஸ் கொடுத்ததோடு அதற்கு இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பும் செய்ததாகக் கூறப்படுகிறது. சஃபி பாபா யோலா பகுதியில் தங்கியிருந்தபோது நிலம் வாங்குவதற்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நிலம் வழங்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு, பலபேரிடம் நன்கொடை பெற்றே தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். ஆன்மீகம் தொடர்பான பயிற்சிகளை வழங்கி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகம்:
நிலம் வாங்குதல் விவகாரம் தொடர்பாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அல்லது, மத ரீதியிலான காரணங்களால் அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை செய்துவருகின்றனர். இந்த கொலை விவகாரத்தில் சஃபி பாபாவின் கார் ஓட்டுநர் முக்கிய பங்கு இருக்கலாம் என்பதும், அவரது ஓட்டுநரும் இந்த கொலைக்கு முக்கிய சாட்சியாகவும், இந்த கொலைக்கு முக்கிய காரணமாகவும் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரிடம் விசாரணை செய்து வருவதாக காவல்துறை அதிகாரி சச்சின் பாட்டில் தெரிவித்துள்ளார்.
நாசிக்கின் முக்கியமான பகுதியில் பட்டப்பகலில் பொதுவெளியில் இக்கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.