சுற்றுலா ரயில் விடும் ஐஆர்சிடிசி.. ரூட் என்ன? டிக்கெட் எவ்வளவு? முழுவிவரம் இதோ..டூர் ப்ளான் போட்டாச்சா?
5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவிக்க இருக்கிறது ஐஆர்சிடிசி. தேகோ அப்னா தேஷ் (Dekho Apna Desh AC Deluxe Tourist Train) என்று இந்த ரயிலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் 5 வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களை அறிவிக்கவுள்ளது ஐஆர்சிடிசி. இந்தப் பயணம் 14 இரவு, 15 பகல் என நீளும்.
தேகோ அப்னா தேஷ் (Dekho Apna Desh AC Deluxe Tourist Train) என்று இந்த ரயிலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் நாட்டை சுற்றிப்பாருங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுதான் முதன்முறை:
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஐஆர்சிடிசி இதுபோன்ற டூரிஸ்ட் ரயில் இயக்குவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சாடர்ஜங் ரயில் நிலையத்தில் தொடங்கும் இந்தப் பயணம் குவஹாத்தி, காசிரங்கா, ஜோன்ஹர்ட், அசாம், இடாநகர், அருணாச்சலப் பிரதேசம், கொஹிமா, அகர்தலா, உதய்பூர், ஷில்லாங், சிரபுஞ்சி, மேகாலயா மார்க்கமாக பயணிக்கும். இதுவரை மக்கள் அதிகம் கவனித்திடாத பகுதி. ஆனால் நிச்சயமாக ஒருமுறையேனும் சென்றுவர வேண்டிய பகுதி என்று ஐஆர்சிடிசி கூறுகிறது.
எங்கெங்கு ஸ்டாப்பிங் இருக்கு:
டெல்லியைத் தவிர பயணிகள் காசியாபாத், டுண்ட்லா, கான்பூர், லக்னோ, வாரணாசி, பாட்னா ரயில் நிலையங்களிலும் ஏறிக் கொள்ளலாம். இந்த சிறப்பு ரயில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்படுகிறது.
இந்த டூர் பேக்கேஜில், காசிரங்கா தேசியப் பூங்காவில் ஜங்கிள் சஃபாரியும் உள்ளது. மேகாலயாவின் ரூட் பிரிட்ஜில் செல்வதும் இருக்கிறது. அசாம் தலைநகர் குவாஹாத்தி காமாக்யா கோயிலுக்கும் சென்று வரலாம். திரிபுராவில் உள்ள திரிபுர சுந்தரி கோயிலுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
இயற்கை எழில் விரும்புவோருக்காக பிரம்மபுத்திரா நதிக்கும், அசாமின் தேயிலைத் தோட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். வரலாற்று ஆர்வலர்களுக்காகவே உனா கோட்டி சிற்பக்கூடமும் பயணத் திட்டத்தில் உள்ளது. அதேபோல் திரிபுராவில் உள்ள உஜ்ஜயந்தா பேலஸ், நீர்மஹால் பேலஸ் ஆகியமவும் பயணத்தில் இடம்பெற்றுள்ளன.
டிக்கெட் விலை எவ்வளவு?
இந்தப் பயணத்துக்கு ரூ.85,495 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏசி 2ஆம் பெட்டிக்கான கட்டணம். இதுவே 1ஏசி பெட்டிக்கான கட்டணம் என்றால் ரூ.1,02,430 ஆகும். பயணிகளுக்கு உயர்தர சுவையான உணவு வழங்கப்படும். ரயிலில் இருந்து இறங்கி வெளியிடங்களுக்குச் செல்லும்போது பயணிகள் ஏசி பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவர். அதேபோல் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த ரயில் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? டூர் ப்ளான் போட்டாச்சா?
அதுமட்டுமில்லாமல், கேங்டாக்குக்கான சுற்றுலா பேக்கேஜ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி
End 2021 on a high note by undertaking a picturesque holiday in the beautiful hills of #Gangtok. From gushing rivers to scenic lakes, enjoy nature in all its glory. Booking & details on https://t.co/RBhXyNJEFL
— IRCTC (@IRCTCofficial) September 30, 2021