மேலும் அறிய

காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!

இந்தியாவின் காண்டம் உற்பத்தித் துறை சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் மூலப்பொருட்கள் அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஈரான் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தற்போது காண்டம் உற்பத்தித் துறையிலும் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது

போர்ச் சூழலும் இறக்குமதி முடக்கமும்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மேற்கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்திருந்த போதிலும், உள்நாட்டில் எரிபொருள் தேவை இன்னும் சீரடையவில்லை. இந்த இக்கட்டான நிலையில், வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்கும் வேதிப்பொருள்களின் இறக்குமதியும் தற்போது முடங்கியுள்ளது.

மூலப்பொருள்கள் தட்டுப்பாடும் விலை உயர்வும்

இந்தியாவின் காண்டம் உற்பத்தித் துறை சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் அம்மோனியா, 80 முதல் 85 சதவீதம் வரை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போதைய போர் பதற்றத்தால் இந்த ரசாயனப் பொருள்களின் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் அம்மோனியாவின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, உற்பத்திக்கான மற்றொரு முக்கிய தேவையான சிலிக்கான் எண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

உற்பத்தி நிறுவனங்களின் நெருக்கடி

மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் உற்பத்தி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. உற்பத்தி செலவு அதிகரிப்பதால் காண்டம்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்தத் தட்டுப்பாடு நீடித்தால் சந்தையில் காண்டம் கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும் எனத் தெரிகிறது.

தீவிரமடையும் சுகாதார அச்சுறுத்தல்கள்

காண்டம் தட்டுப்பாட்டை வெறும் வணிகப் பிரச்சனையாக மட்டும் கடந்து செல்ல முடியாது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், தேவையற்ற கருத்தரிப்பைத் தடுக்கவும், எச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கவும் காண்டம் முதன்மையான சாதனமாக விளங்குகிறது. இதன் விலை அதிகரித்தாலோ அல்லது தட்டுப்பாடு ஏற்பட்டாலோ, திட்டமிடப்படாத கர்ப்பங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளின் விகிதம் அதிகரிக்கக்கூடும்.

அரசின் தலையீட்டுக்கான அவசியம்

சுகாதாரத் துறையில் ஏற்படப்போகும் இந்த பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. காண்டம் உற்பத்திக்கான மாற்று வழிகளை ஆராய்வதும், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதும் தற்போதைய சூழலில் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!
தங்கப் பத்திர முதலீடு: ஜூலையில் முன்கூட்டியே பணமாக்கி வரிச் சலுகையுடன் லாபம் ஈட்ட பொன்னான வாய்ப்பு!
EPF பணம் எடுப்பது இனி எளிது! UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு – முழு விவரம்
EPF பணம் எடுப்பது இனி எளிது! UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு – முழு விவரம்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget