![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணையும் 92 வயது முதியவர்...யூடியூபர்களின் அசாத்திய செயல்
இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தை பிரிந்த 92 வயது முதியவர், 75 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரரின் மகனை சந்திக்க உள்ளார்.
![75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணையும் 92 வயது முதியவர்...யூடியூபர்களின் அசாத்திய செயல் Internet Helps 92 Year-Old Punjab Man Reunite With Nephew After 75 Years 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணையும் 92 வயது முதியவர்...யூடியூபர்களின் அசாத்திய செயல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/36ff32ca84b5a8d9f34f6a0263f7823f1659975434557224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது, குடும்பத்தை பிரிந்த 92 வயது முதியவர், 75 ஆண்டுகளுக்கு பிறகு தனது சகோதரரின் மகனை சந்திக்க உள்ளார். நாட்டு பிரிவினையின்போது, அவரின் பல உறவினர்கள் மத கலவரத்தில் கொல்லப்பட்டனர். சர்வான் சிங் தனது சகோதரரின் மகன் மோகன் சிங்கை பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் சந்திக்கிறார்.
இதுகுறித்து சர்வான் சிங்கின் பேரன் பர்விந்தர் கூறுகையில், "தாத்தா (சர்வான் சிங்) இன்று தனது சகோதரரின் மகனை கர்தார்பூர் சாஹிப்பில் சந்திக்கச் சென்றபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மோகன் சிங்குக்கு இப்போது புதிய அடையாளம் இருக்கிறது. பாகிஸ்தானில் இஸ்லாமிய குடும்பத்தால் அவர் வளர்க்கப்பட்டார். பிரிவினையின் போது அவருக்கு ஆறு வயது" என்றார்.
75 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் மீண்டும் இணைய உதவியதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு யூடியூபர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். ஜண்டியாலாவை தளமாகக் கொண்ட யூடியூபர் பல பிரிவினைக் கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் சர்வான் சிங்கைச் சந்தித்து அவரது வாழ்க்கைக் கதையை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
பாகிஸ்தானிய யூடியூபர், பிரிவினையின் போது தனது குடும்பத்திலிருந்து பிரிந்த மோகன் சிங்கின் கதையை விவரித்திருக்கிறார். தற்செயலாக, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு வீடியோக்களைப் பார்த்து உறவினர்களை இணைக்க உதவியுள்ளார்.
இதுபற்றி பர்விந்தர் பேசுகையில், சர்வான் சிங் தனது காணாமல் போன சகோதரர் மகனின் அடையாளக் குறிகளைக் குறிப்பிட்டு, ஒரு கையில் இரண்டு கட்டைவிரல்கள் இருப்பதாகவும், அவரது தொடைகளில் ஒரு முக்கிய மச்சம் இருப்பதாகவும் காணொளி ஒன்றில் கூறினார். மறுபுறம், பாகிஸ்தான் யூடியூபர் வெளியிட்ட வீடியோவில் மோகன் சிங்கைப் பற்றி இதே போன்ற விஷயங்கள் பகிரப்பட்டன.
பின்னர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் எல்லையின் இருபுறமும் உள்ள இரு குடும்பத்தினருடனும் தொடர்பு கொண்டார். தாத்தா மோகன் சிங்கை அவரது அடையாளக் குறிகளால் அடையாளம் காட்டினார். பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்பில் சகோதரர் மகனை சந்திக்கும் சர்வான் சிங்குடன் தாய் ரச்பால் கவுர் செல்கிறார்" என்றார்.
சர்வான் சிங்கின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் உள்ள சக் 37 என்ற கிராமத்தில் வசித்து வருகிறது. பிரிவினையின் போது நடந்த வகுப்புவாத வன்முறையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டனர். சர்வான் சிங் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் வன்முறையிலிருந்து தப்பிய மோகன் சிங், பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பத்தால் வளர்க்கப்பட்டார்.
தனது மகனுடன் கனடாவில் வசித்து வந்த சர்வான் சிங், கரோனா தொற்றுநோய் தாக்கியதில் இருந்து ஜலந்தர் அருகே உள்ள சாந்த்மான் கிராமத்தில் தனது மகளின் வீட்டில் தங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)