மேலும் அறிய

Karnataka: பள்ளியில் வழங்கப்பட்ட பாலில் பல்லி! குடித்த 23 மாணவர்கள் மயக்கம் - கர்நாடகாவில் சோகம்

கர்நாடகாவில் பெலகாவியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று வழங்கப்பட்ட பாலை குடித்த 23 மாணவர்கள் மயக்கம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள பள்ளி ஒன்றின் மதிய உணவு நேரத்தின்போது பல்லி கலந்த பாலை குடித்த 23 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

கல்வித் துறையின் கூற்றுப்படி, பெலகாவியில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (ஜனவரி 11) காலை குறைந்தது 23 மாணவர்கள் பால் குடித்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கல்வித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

கல்வி அதிகாரிகள் சொன்னது என்ன..?

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஹுக்கேரி தொகுதி கல்வி அலுவலர் (பிஇஓ) பிரபாவதி பாட்டீல் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். விசாரணைக்கு பிறகு அவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் குடிக்கும் குழந்தைகள் அனைவரையும் சங்கேஷ்வர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். மாணவர்கள் பீதி அடையாமல் இருக்க, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறாமல் தவிர்த்துள்ளோம்" என்றார். மேலும், சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு, யாருடைய அலட்சியத்தால் இது நடந்தது என்பது கண்டறியப்பட்டு வருகிறோம் என்றும், தவறை சரிசெய்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

 400 மாணவ, மாணவியர் பயிலும் பள்ளி:

கானாபூர் கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் கன்னடம், மராத்தி, உருது ஆகிய தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். காலை 11.30 மணியளவில் மாணவர்களுக்கு மதிய உணவில் பால் வழங்கப்பட்டது. பால் பரிமாறும் நபர் ஒருவர் பாத்திரத்தின் அடிப்பகுதியில் இறந்து கிடந்த பல்லியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, இதுகுறித்து உடனடியாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

தகவலறிந்து விரைந்த ஆசிரியர்கள், இதுவரை குடிக்காத அனைத்து மாணவர்களிடமிருந்தும் பாலை திரும்ப வாங்கியுள்ளனர். அப்போது, பால் கொடுக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 23 பேர் ஏற்கனவே அந்த பல்லி விழுந்த பாலை உட்கொண்டதாகவும் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரபாவதி பாட்டீல் கூறினார்.

தலைமை ஆசிரியர் என்ன சொன்னார்?

சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் சங்கேஷ்வர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தற்போது அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர். இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் சில தனியார் வாகனங்களில் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் பெற்றோரும் மருத்துவமனையில் உள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கும், பால் வழங்கும் நிறுவனத்துக்கும் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget