ரயிலில் வழங்கப்படும் சமோசாவில் இப்படியா? அதிர்ச்சியடைந்த பயணி.. பதிலளித்த IRCTC
IRCTC : ரயிலில் வழங்கப்படும் சமோசாவில் ஃபைபர்...பயணிக்கு பதிலளித்த IRCTC
![ரயிலில் வழங்கப்படும் சமோசாவில் இப்படியா? அதிர்ச்சியடைந்த பயணி.. பதிலளித்த IRCTC Indian Railways Responds After Man Claims To Find](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/002ef7e16f5b37b7a66c6359598089701662971459881102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரயிலில் வழங்கப்படும் சமோசாவில் ஃபைபர்.. அதிர்ச்சியடைந்த பயணி...
ரயிலில் வழங்கப்படும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதாக ஒருவர் சமூக வலைதளத்தில் கூறியதை அடுத்த IRCTC பதிலளித்துள்ளது.
மும்பை-லக்னோ ரயிலில் பயணித்த ஒருவர், ரயிலில் வழங்கும் (IRCTC) சமோசாவில் "மஞ்சள் காகிதம்" இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளார். இதில் அவர் கூறியது, "ஐஆர்சிடிசி பேண்ட்ரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அதில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு பார்த்தேன் அதில் ஃபைபர் காகிதம் ஒன்று இருந்ததை கண்டு அச்சமடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
This Samosa served IRCTC pantry provided in Train No. 20921 Bandra bound Lucknow weekly exp. started on 8-10-22..i bought it 9-10-22 morning around 10:15 AM.... I salute IRCTC for the foods serving to the passengers... pic.twitter.com/2ugoUzSmoU
— Aji Kumar (@AjiKuma41136391) October 9, 2022
இந்த சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் IRCTC கூறியதாவது உணவில் காகிதம் இருப்பதை கண்டு வருத்தப்படுகிறோம். இதுபோன்ற சிரமத்திற்கு உங்களை கொண்டு சென்றதற்கு மனிக்கவும். pnr மற்றும் மொபைல் எண்ணை தன் ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என IRCTC கூறியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என IRCTC ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Sir, inconvenience regretted. Kindly share pnr and mobile no in DM.
— IRCTC (@IRCTCofficial) October 9, 2022
IRCTC மன்னிப்பு கேட்டாலும், இணைய பயனர்கள் திருப்பிதி அளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஒரு பயனர் கூறியது டிக்கெட் உறுதிப்படுத்தல் உட்பட ரயில்வே அமைப்பில் உள்ள அம்சங்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றன. முக்கியமாக எல்லாவற்றுக்கும் கட்டணம் வசூலிப்பது போல பணம் வசூலிக்கிறார்கள்.ஏ ழைகளின் நிலைமை என்னவென்று உங்களுக்குப் புரியவில்லை. இது வளரும் இந்தியாவில் பணத்தை பறிப்பதாகும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
IRCTC பதிலை ஏற்றுக்கொண்ட மற்றொருவர், "இதுஒரு பிசினஸ் ஆகிவிட்டது.. பயணிகளுக்கு மட்டுமே IRCTC ரயிலின்சேவைகளின் உண்மையான வலி மற்றும் நிலை தெரியும்" என்று அவரது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)