India Vs Pakistan : "இந்தியா எல்லைக்குள்ளா வர்றீங்க?” பாக். லாகூரில் தாக்குதலை தொடங்கியது இந்திய படை..!

இந்திய எல்லைக்குள் வந்து பாகிஸ்தானின் விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தி பொடி, பொடியாக்கியது இந்திய ராணுவம். இந்நிலையில், சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி கணக்காக, பாகிஸ்தானின் இந்த வீண் வீராப்புக்கு பதிலடியாக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத் மற்றும் முக்கிய நகரமான லாகூரை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கின இந்திய படைகள். இதை எதையும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் கொலை நடுங்கி வருகிறது.
இந்தா வாங்கிக்க
பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியதற்கு கோபம் இந்தியா மீது கோபம் கொண்ட பாகிஸ்தான் வேலியில் போகும் ஓணானை வேட்டியில் எடுத்துவிட்ட கதையாக தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவின் தரைப்படையும், விமானப் படையும் தகுந்த பதிலடிகளை கொடுத்து வருகின்றன. இதனால், பாகிஸ்தான் மக்களே அந்த அரசாங்கம் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். உங்களது வீண் வம்பால் மக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று அவர்கள் பாகிஸ்தான் அரசு மீது கோபம் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வை சேர்ந்த பலரும் பாகிஸ்தானில் மக்களோடு மக்களாக இருக்கின்றனர். அவர்களும் பதில் தாக்குதலை தற்போது முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனால், ஏண்டா இந்தியாவை மீது கையை வைத்தோம் என்று விரைவில் பாகிஸ்தான் வருத்தப்படவுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















