Watch IAF Video: “போருக்கு எப்போதும் தயார்“ இந்திய விமானப்படை வெளியிட்ட அட்டகாசமான வீடியோவ பாருங்க
IAF Video: ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை அடித்து நொறுக்கிய இந்திய விமானப்படை, நாங்கள் எப்போதும் போருக்கு தயார் என்பதை பறைசாற்றும் வகையில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில், இந்திய ராணுவத்தில் முக்கிய பங்காற்றியது விமானப்படை. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகளை துல்லியமாக அடித்து துவம்சம் செய்தது இந்திய விமானப்படையின் போர் விமானங்களும், தற்கொலை ட்ரோன்களும் தான். இந்நிலையில், தற்போது, எப்போதும் போருக்கு தயார் என்பதை அறிவிக்கும் விதமாக, இந்திய விமானப்படை ஒரு அட்டகாசமான வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் அடித்து நொறுக்கிய இந்திய விமானப்படை
காஷ்மீரின் பஹல்காமில், தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் அரசின் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட தாக்குதலை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது நடத்தியது இந்தியா.
ஒரே இரவில், இந்திய விமானப்படையின் விமானங்கள், ஏவுகணைகளை வீசி 9 தீவிரவாத நிலைகளை தாக்கி அழித்தன. அதைத் தொடர்ந்து, மறுநாளும், இந்திய விமானப்படையின் தற்கொலை ட்ரோன்கள், பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதையடுத்து ஸ்தம்பித்துப்போன பாகிஸ்தான், இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி, பொதுமக்களை குறி வைத்து தாக்குதலை நடத்தியது. இதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கின. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் கலங்கிய சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், சமரசம் செய்து வைக்க முன்வந்தன. ஏற்கனவே சீனாவில் அழைப்பை ஏற்க இந்தியா மறுத்த நிலையில், பல முறை முயன்ற அமெரிக்கா, இறுதியில் இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, இரு தரப்பிலும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தியா தற்காலிகமாகத் தான் தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும், எந்த நேரமும் தாக்குதல் நடத்த முப்படைகளும் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இனி எந்த ஒரு தீவிரவாத நடவடிக்கையும் போராகவே கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் தான், தற்போது இந்திய விமானப்படை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
“போருக்கு எப்போதும் தயார்“ - இந்திய விமானப்படையின் அட்டகாசமான வீடியோ
இந்திய விமானப்படை, தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்களே முதல் என்றும் எப்போதும் பணியில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை உறுதியுடன் பதிலளித்தது என்றும் எப்போதும் அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
#IndianAirForce@PMOIndia@rajnathsingh@DefenceMinIndia@SpokespersonMoD @HQ_IDS_India @adgpi @indiannavy@IndiannavyMedia @PIB_India @MIB_India pic.twitter.com/xXnycOOXva
— Indian Air Force (@IAF_MCC) May 20, 2025





















