மேலும் அறிய

India Corona Cases Today: தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது; இன்று 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.62 லட்சம், நேற்று 3.43 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  3.26 லட்சமாக குறைந்தது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

India Corona Cases Today: தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது; இன்று 3.26 லட்சம் பேருக்கு பாதிப்பு

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.62 லட்சம், நேற்று 3.43 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று  3.26 லட்சமாக குறைந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில்  3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-இல் இருந்து 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 317-ல் இருந்து 2 லட்சத்து 66 ஆயிரத்து 207-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை  2 ,00, 79,599 இல் இருந்து 2 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.

India reports 3,26,098 new #COVID19 cases, 3,53,299 discharges and 3,890 deaths in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 2,43,72,907
Total discharges: 2,04,32,898
Death toll: 2,66,207
Active cases: 36,73,802

Total vaccination: 18,04,57,579 pic.twitter.com/qvAExjSPxE
— ANI (@ANI) May 15, 2021

கொரோனா தொற்றி இருந்து குணமடைந்தோர் விகிதம் 83.50 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.09 சதவீதமாகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36 லட்சத்து 73 ஆயிரத்து 802-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 91 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 632இல் இருந்து 31 ஆயிரத்து 91 ஆக மீண்டும் அதிகரித்துள்ளது. இதுவரை 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.