மேலும் அறிய

Corals Translocation: கடலிலேயே 5 கி.மீ பயணம்: மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய 16000 பவளப்பாறைகள்

40 ஆண்டுகள் பழமையான அதன் தேய்ந்து போன பைப்லைனை மாற்ற வேண்டியதன் காரணமாக, இந்த பவள பாறைகளின் தொகுப்பு அழிவின் அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Corals Translocation Project: குஜராத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்த 16,000 பவளப்பாறைகள் , 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Corals Translocation Project (பவளப் பாறைகள் இடமாற்றம்):

ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் (MNP Marine National Park),  இந்தியாவின் மிகப்பெரிய இடமாற்றத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்,  16,000 பவளப்பாறைகள் , வண்ணமயமான கடல் உயிரினங்கள், மரணத்திலிருந்து வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கடலுக்கு அடியில் (ஐஓசி) புதிய பைப்லைனை அமைத்ததால் இந்த பவளபாறைகள் இடமாற்றம் செய்ய வேண்டியதாயிற்று.  40 ஆண்டுகள் பழமையான அதன் தேய்ந்து போன பைப்லைனை மாற்ற வேண்டியதன் காரணமாக, இந்த பவள பாறைகளின் தொகுப்பு அழிவின் அபாயத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டம் தொடங்கியது எப்போது?

அழிந்து வரும் இந்த உயிரினங்களை நுட்பமாக கையாள வேண்டிய திட்டம் ஜூலை 2021ம் ஆண்டில்,  குஜராத் வனத்துறையால் இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிபுணர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.  பவளப்பாறைகள் நீருக்கடியில் சுற்றுச்சூழலை அழிவதிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் அவை பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உருவாக்குவதால் பொருளாதார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன.  IOCL இன் பழைய பைப்லைனின் ஆயுட்காலம் முடிவடைய இருந்ததால்,  புதிய குழாய் பதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த உயிரினங்களை சேதப்படுத்தாமல் மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் இருந்து பவளப் பாறை தொகுப்பை இடமாற்றம் செய்வதற்கான அனுமதியை அந்நிறுவனம் பெற்றது.

சவால்களும், சாதனையும்:

கடல் தேசிய பூங்காவின் தலைமை வனப் பாதுகாவலர் செந்தில் குமரன் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசுகையில், "எங்களுக்கு முன் உள்ள பிரச்னை பாதுகாப்பு, அதன் வளர்ச்சி மற்றும் பவளப்பாறைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எவ்வாறு தணிப்பது என்பதுதான். கடந்த காலத்தில் சிறிய அளவில் பவளப்பாறைகளை இடமாற்றம் செய்தோம், ஆனால் இதுதான் இந்திய வரலாற்றில் பவளப் பாறைகளின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான இடமாற்றம். கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ZSI இன் பத்து நிபுணர்கள் ஒன்றரை வருடங்கள் இந்த இடமாற்ற பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பவளப்பாறைகள் நாராராவில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த உயிரினங்களுக்கு ஏற்ற தளத்திற்கு மாற்றப்பட்டன” என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

பவளப்பாறைகள் பாதுகப்பாக உள்ளனவா?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள கடல் தேசிய பூங்காவில் இரண்டு வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. ஒன்று ஆழமான நீரில் செழித்து வளரும் சப்டிடல் பவளப்பாறைகள் மற்றும் இரண்டாவது மேற்பரப்பில் காணப்படும் இடைநிலை பவளப்பாறைகள். இவை ஸ்நோர்கெல்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டன. "இதை வெற்றிகரமான இடமாற்றம் என்று அழைக்கிறோம், ஏனென்றால் அவற்றின் உயிர் பிழைப்பு விகிதம் 90% க்கும் அதிகமாக உள்ளது. இது ஐந்தாண்டு திட்டமாகும்.  மேலும் பவளப் பாறைகள் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு ஏதேனும் நோய்கள் அல்லது பாசிகளை உருவாக்குகின்றனவா,  என தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் அவற்றின் தொடர்ச்சியான ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யப்படும்" என செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget