'புரளியா பரப்புறீங்க?” 8 ஆயிரம் ட்விட்டர் கணக்கை முடக்கியது இந்தியா..!

இந்திய மக்கள் இடையே தேவையில்லாத பதற்றத்தையும் பயத்தையும் உண்டு செய்யும் வகையில் எக்ஸ் தளத்தில் செயல்பட்ட 8 ஆயிரம் பேரின் கணக்குகளை இந்திய அரசின் உத்தரவையடுத்து முடக்கியது ட்விட்டர் நிறுவனம். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்ட இந்த கணக்குகளை கண்டறிந்து முடக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குகளை முடக்காமல் எக்ஸ் நிர்வாகம் இருந்தால் அவர்களுக்கு அபராதம் முதல் சிறை தண்டனை வரை விதிக்கப்படும் என்று இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளதால், உடனடியாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முப்படைகளும் தீரமுடன் பாகிஸ்தானை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்திய நிலைகள் குறித்து அவதூறு பரப்புவது, தேசத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிடுவதன் மூலம் இந்திய மக்கள் இடையே குழப்பத்தையும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திய கணக்குகளே முடக்கப்பட்டுள்ளன.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)





















