மேலும் அறிய

PM Modi: ஆசியான் மாநாட்டில் இந்தியா என்ற சொல்லை தவிர்த்த பிரதமர் மோடி..

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது உரையில் இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத் என பயன்படுத்தியுள்ளார்.

செப்ட்ம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்த 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.

பாஜக தரப்பில் பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. அதில் வழக்கத்திற்கு மாறாக 'பாரதப் பிரதமர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகள் இருந்தாலும், இதுவரை  இந்திய குடியரசு தலைவர், இந்தியா பிரதமர் என்று தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.

இப்படி இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்படி அவரது உரையை தொடங்கும் போது இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டு பேசியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறிய நிலையில் பிரதமர் மோடியின் உரையால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, தென் சீனக் கடலுக்கான நடத்தை விதிகள் UNCLOS-இன் படி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் தனது கருத்துக்களில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவை அனைவரின் நலனுக்காகவும், குவாடின் (QUAD) நேர்மறையான செயல்திட்டமானது ஆசியானின் பல்வேறு வழிமுறைகளை நிறைவு செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டத்தை' இந்தியா முழுமையாக ஆதரிப்பதாகவும், இந்தியா மற்றும் ஆசியானின் இந்தோ-பசிபிக் பார்வையில் ஒற்றுமை இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், "இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியை' செயல்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக 'கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின்' முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. QUAD-இன் பார்வையில் ASEAN ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. QUAD இன் நேர்மறையான நிகழ்ச்சி நிரல் ASEAN இன் பல்வேறு வழிமுறைகளுடன் நிறைவு செய்கிறது” என பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Breaking News LIVE:  மும்பையில் பிரம்மாண்ட பேரணி - இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா
Breaking News LIVE: மும்பையில் பிரம்மாண்ட பேரணி - இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance : பாமக போஸ்டரில் ஜெ. படம்! EPS மாஸ்டர் ப்ளான்!விறுவிறுக்கும் விக்கிரவாண்டிHathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
HDFC வாடிக்கையாளர் கவனத்திற்கு.. 14 மணி நேரத்திற்கு முடங்கப்போகும் சேவைகள்!
Breaking News LIVE:  மும்பையில் பிரம்மாண்ட பேரணி - இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா
Breaking News LIVE: மும்பையில் பிரம்மாண்ட பேரணி - இந்திய கிரிக்கெட் அணிக்கு நாளை பாராட்டு விழா
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Embed widget