மேலும் அறிய

இந்தியாவில் படிக்கவிடுங்க... உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக எழும் குரல்!!

உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்தியக் கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்தியக் கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த 10 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது. பல்கலைக்கழகத்தின்மீது குண்டு வீசிய காட்சிகளும் வைரலாகின. 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. அங்கு சென்றிருந்த மாணவர்களில் 90% பேர் மருத்துவம் பயிலவே சென்றிருந்தனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தில் உக்ரைனில் உள்ள 18,095 இந்தியர்களில் 90% மாணவர்கள் மருத்துவம் பயிலச் சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

டிசம்பர் 2021ல் மக்களவையில் மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்த தகவலின்படி, இந்தியாவில் எம்பிபிஎஸ் கல்வி பயில 88,120 இடங்களும், பல் மருத்துவம் பயில 27,498 இடங்களுமே உள்ளன. ஆனால் மருத்துவக் கனவுடன் கடந்தாண்டு நீட், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 13 லட்சம் மாணவர்கள் ஆவர். 

இந்த சூழலில், கார்கீவ் நகரில் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு நீட் தேர்வு தான் காரணம் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். மாணவரின் தந்தை தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் சீட் கிடைக்காமல் உக்ரைன் சென்றார் என்று புலம்பியிருந்தார்.

இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் (IMA) இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளது. 

அந்தக் கடிதத்தில், உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, இந்தியாவில் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம். 

மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும் ஒருமுறை மட்டும் சிறப்புத் தெரிவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதே கோரிக்கையை சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் காரசார வாதம்!
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget